முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனவாத அறியாமை அகற்றிய ஜெர்மன் கிராமம்

இன‌வாத‌ம், இஸ்லாமோபோபியாவுக்கு காரண‌ம் ம‌க்க‌ளின் அறியாமை. வேற்றின‌த்த‌வ‌ருட‌ன் க‌ல‌ந்து ப‌ழ‌கும் வாய்ப்புக் கிடைத்தால் த‌ப்பெண்ண‌ம் வில‌கும் என்ப‌தை விள‌க்கும் செய்திக் க‌ட்டுரை ஒன்று The New York Times (21 September 2019) இல் பிர‌சுர‌மாகியுள்ள‌து. ம‌னித‌நேய‌ம் உள்ள‌ சாதாரண‌ ம‌க்க‌ள் "எதிரி" இன‌த்த‌வ‌ருட‌னும் ந‌ட்புட‌ன் ப‌ழ‌குவார்க‌ள். இத‌ற்கு உதார‌ண‌மாக‌ முன்னாள் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் ஒரு கிராம‌ம் ந‌டைமுறையில் நிரூபித்துக் காட்டியுள்ள‌து. 2015 ம் ஆண்டு ஜேர்ம‌னியில் போல‌ந்து எல்லைக்கு அருகில் உள்ள‌ கொல்ஸோவ் (Golzow) கிராம‌த்தில் 16 சிரிய‌ அக‌திக் குடும்ப‌ங்க‌ள் குடிய‌ம‌ர்த்த‌ப் ப‌ட்ட‌ன‌. ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளில் இருந்த‌ ச‌ந்தேக‌ங்க‌ள், அவ‌ந‌ம்பிக்கைக‌ள் ம‌றைந்து, த‌ற்போது அங்கு எல்லோரும் ம‌கிழ்ச்சியாக‌ வாழ்கின்றன‌ர். க‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில் கொல்ஸோவ் கிராம‌வாசிக‌ளில் நான்கில் ஒருவ‌ர், அக‌திக‌ள், இஸ்லாமிய‌ருக்கு எதிரான‌ இன‌வாத‌ம் பேசும் AfD க‌ட்சிக்கு வாக்க‌ளித்த‌ன‌ர். அத‌ற்காக‌ அந்த‌ ம‌க்க‌ள் "இன‌வாதிக‌ள்" என்று அர்த்த‌ம‌ல்ல‌. அர‌சிய‌ல் வேறு, ய‌தார்த்த‌ம்

இனவாத பூர்க்கா தடை - நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை

நெதர்லாந்து அரசு கொண்டு வந்த இனவாத பூர்க்கா தடைச் சட்டத்திற்கு எதிராக, "நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி" (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை:  இனவாத நிகாப்- தடை ஒழிக ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நெதர்லாந்தில் பூர்க்கா தடை உள்ளது. இது இல்லாத ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்திருப்பது மட்டுமல்லாது, இனவாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது மொத்த சனத்தொகையில் 0.001% மட்டும் தான் (பூர்க்கா எனப்படும்) நிகாப் அணிகின்றனர். 2005 ம் ஆண்டு, PVV கட்சித் தலைவர் வில்டர்ஸ் இந்த பிரேணையை முன்மொழிந்தார். வெளிப்படையாக இனவாத தன்மை கொண்ட ஒரு பிரேரணை, அர்த்தமற்ற விவாதங்கள் மூலம் பாலின சமப்படுத்தல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பூர்கா இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டு, பெண்ணியவாதிகள் எனப் படுபவர்களும், ஏராளமான ஆண்களும் இந்த ஆலோசனையை ஆதரித்து வருகின்றனர். அது தான் நெதர்லாந்தில் நிலவும் ஆணாதிக்க தன்மை கொண்ட, இனவாத பெண்ணியத்தின் கண்ணோட்டம். தாம் "சம உரிமை பெற்று விட்டதாக" கருதிக் கொள்ளும் வெள்ளையின பெ

வட கொரியாவில் இந்த அழகான வீடு முற்றிலும் இலவசம்!

வட கொரியாவில் இந்த அழகான வீடு உங்களுக்கு முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது. வாடகையும் அதிகமில்லை. இரண்டு மாதம் வாடகை கட்டவில்லை என்ற காரணத்திற்காக யாரும் உங்களைப் பிடித்து தெருவில் விட மாட்டார்கள். இங்கே "வாடகை" என்பது பராமரிப்பு செலவுகளுக்கானது. பெரும்பாலும் புதிய வீட்டுமனைகள் எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்பதால் பராமரிப்புச் செலவுகளும் அதிகம். அது அங்கு குடியிருக்கும் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப் படுகிறது. தொண்ணூறுகளுக்கு முன்னர் வட கொரியாவில் சோஷலிச அமைப்பு இருந்த காலத்தில் எழுதப்பட்ட சட்டம் இப்போதும் அமுலில் உள்ளது. ஒவ்வொரு குடும்பமும் தனியாக வீடு கிடைப்பதற்கான வசதிகளை அரசே செய்து கொடுக்கும். ஒரு குடும்பம் புதிய வீடொன்றுக்கு குடிபுகும் பொழுது "ipsajung" (குடிபுகுந்த பத்திரம்) எனும் பத்திரம் வழங்கப் படும். ipsajung பத்திரத்தில் "வசிப்பதற்கான அனுமதி" என்று தான் எழுதப் பட்டுள்ளது. ஆனால் காலாவதியாகும் திகதியோ, அல்லது குறிப்பிட்ட காலத்திற்கான ஒப்பந்தமோ அல்ல. ஆகையினால் மக்கள் தாம் "சொந்த வீட்டில்" வசிப்பதாக நம்பி வந்தனர். இ

காஷ்மீர் & ஈழம் : தீராத் துயரை பகிர்தல்

காஷ்மீரில் ஒரு கிராமத்தில், இந்திய இராணுவம் வீடு வீடாகச் சென்று ஆண் பிள்ளைகள் அனைவரையும் பிடித்து வந்து, ஒரு பொது இடத்தில் இருத்தி வைத்திருக்கும் காட்சி. 1987 ம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் இருந்த எனக்கும் இதே மாதிரியான அனுபவம் கிடைத்தது. அப்போது எங்களது கிராமத்தை சுற்றிவளைத்த இந்திய இராணுவம், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று ஆண் பிள்ளைகள் எல்லோரையும் வெளியே வரச் சொன்னார்கள். எங்கள் எல்லோரையும் அங்கிருந்த ஆரம்பப் பாடசாலை முற்றத்தில் அமர வைத்தார்கள். பின்னர் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த இராணுவ முகாமிற்கு கொண்டு சென்று ஒரு நாள் முழுவதும் வைத்திருந்தார்கள். அந்த இராணுவ முகாமும் ஒரு பாடசாலைக் கட்டிடம் தான். எங்களை எல்லாம் வகுப்பறை மண்டபங்களில் வெறும் தரையில் படுக்க வைத்தார்கள். அப்போது அவர்கள் இரவுணவாக தந்த காய்ந்து போன சப்பாத்தியும், தண்ணீர் மாதிரியான சாம்பாரும் இப்போதும் நினைவில் உள்ளது. அடுத்த நாள், சந்தேகத்திற்கிடமான ஒரு சிலரை மட்டும் தடுத்து வைத்துக் கொண்டு மற்றவர்களை விடுதலை செய்தார்கள். எங்கள் ஊரில் இருந்த பெரும்பாலான வீடுகளில் அன்று பெண்கள் மட்டும் தனியாக இருந்தார்கள

நாஜி இந்தியாவின் அடுத்த அடக்குமுறை: தடுப்பு முகாம்கள்!

இதோ நாஜி இந்தியாவின் அடுத்த கட்ட அடக்குமுறை: தடுப்பு முகாம்கள்! இது அசாமில் தங்கியுள்ள பங்களாதேஷ் குடியேறிகளுக்கு எதிரானது மட்டுமல்ல. இந்த தடுப்பு முகாம்கள் நாளைக்கு நாடு முழுவதும் கட்டப் படலாம். தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழ் அகதிகளும் அதற்குள் அடைக்கப் படலாம். அது மட்டுமல்ல, நாளைக்கு அரசு நினைத்தால், யாரை வேண்டுமானாலும் ஏதாவதொரு சாட்டுக் கூறி குடியுரிமையை பறித்து தடுப்பு முகாமுக்கு அனுப்பலாம். அசாம் மாநிலத்தில் பல தசாப்தகாலமாக தங்கியிருந்து இந்தியப் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்த தொழிலாளர்களைத் தான், பாஜக நாஜிகளின் கொடுங்கோல் அரசு ஈவிரக்கமின்றி தடுப்பு முகாமிற்கு அனுப்புகிறது. ஏழை பாமரத் தொழிலாளர்கள், பிறப்புச் சான்றிதழ் போன்ற அரச ஆவணங்கள் வைத்திருக்காத காரணத்தை காட்டி, தடுப்பு முகாமுக்குள் அடைத்து வைக்கவிருக்கிறது. இவ்வாறு தான் நாஜி ஜெர்மனியின் அடக்குமுறை ஆட்சி ஆரம்பமாகியது. பிரெஞ்சு, இத்தாலி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஜெர்மனியில் குடியேறியவர்கள் ஜெர்மன் குடியுரிமை பெறும் வாய்ப்பை இல்லாதொழித்தது. அப்படியான "சட்டவிரோத குடியேறிகளுக்காகவே" தடு

பயங்கரவாத பழி சுமத்தப்பட்ட அப்பாவி அரபு இளைஞன் பற்றிய ஸ்பானிஷ் படம்

"La víctima número 8" (எட்டாவது பலி) என்ற ஸ்பானிஷ் தொலைக்காட்சித் தொடர் Netflix இல் காணக் கிடைக்கிறது. ஒரு நாட்டின் அரச புலனாய்வுத்துறையினர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலை நடத்தி விட்டு, அதைச் செய்தவர்கள் ஜிகாதி தீவிரவாதிகள் என்று சொல்லி ஒரு அப்பாவி அரபு இளைஞனை பலியாடு ஆக்குவது தான் கதைக்கரு. படத்தில் ஒமார் ஜமால் என்ற அரபு இளைஞனாக ஒரு ஸ்பானிஷ் நடிகரே நடித்துள்ளார். தமிழில் வெளியான விசாரணை படத்தின் பாணியில் தான் இந்தத் தொடர் எடுக்கப் பட்டுள்ளது. ஸ்பெயினில், பில்பாவோ நகரில், "இஸ்லாமிய பயங்கரவாதம்" என்ற பெயரில் அரச புலனாய்வுத்துறை வைத்த குண்டு வெடித்து எட்டுப் பேர் பலியாகின்றனர். ஒரு அப்பாவி அரேபிய இளைஞனை கடத்திச் சென்று, "இவன் தான் அந்த குண்டு வைத்த ஜிகாதி தீவிரவாதி" என்று பழி சுமத்துகின்றனர். ஊடகங்களும் அதையே ஒப்புவிப்பதால் நாடு முழுவதும், முஸ்லிம் குடியேறிகள் உட்பட, அனைத்து மக்களும் அதை உண்மையென்று நம்புகிறார்கள். ஆனால், அந்த இளைஞன் குற்றமற்றவன் என்பதை அவனது தாயும், காதலியும் மட்டுமே நம்புகிறார்கள். இறுதியில் உண்மை வெளிவந்ததா என்பதை படத்தைப் பார்த்த

1870: சிங்கள- முஸ்லிம் கலவரத்திற்கு காரணமான ஐரோப்பிய முஸ்லிம்கள்

இலங்கையில் 19 ம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த முதலாவது சிங்கள- முஸ்லிம் கலவரம் பற்றிய வரலாற்றுத் தகவல் ஒன்றை Sarawanan Komathi Nadarasa தினக்குரல் பத்திரிகையில் கட்டுரையாக பதிவு செய்துள்ளார். அதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் உள்ளது.  பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளரின் தலைநகரமான கொழும்பு நகரில், மருதானை பகுதியில் இந்தக் கலவரம் நடந்துள்ளது. அப்போது போலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்தவர் ஓர் ஆங்கிலேயர். அவர் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து நேர்மையாக நடந்து கொண்டுள்ளார். அந்த ஆங்கிலேய போலிஸ் பொறுப்பதிகாரி, அன்று தீவிரமாக கலவரத்தில் ஈடுபட்ட சில முஸ்லிம்களை கைது செய்துள்ளார். அதில் மூன்று பேர் "வெள்ளையின ஐரோப்பியர்கள்"! உண்மையில் அவர்கள் தான் கலவரம் தீவிரமடைய காரணமாக இருந்துள்ளனர்!! ஒருவர் ஜேர்மனிய யூதர். மற்றைய இரண்டு பெரும் இஸ்லாமியராக மதம் மாறியிருந்த ஆங்கிலேயர்கள். இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகின்றது. ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்கள், பிரித்தாளும் உத்தியை பயன்படுத்தியே தமது காலனிகளை நிர்வகித்துள்ளனர். அதன் விளைவுகளை நாங்கள் இப்போதும் அனுபவிக்கிறோம். இலங்கையில் பௌ

தமிழ்ப் பெண்கள் அணியும் அபாயா ஓர் "இஸ்லாமிய ஆடை" அல்ல!

இன்று வரை பலர் அறியாத உண்மை. இலங்கையில் (இந்து/கிறிஸ்தவ) தமிழ்ப் பெண்களும் "அபாயா" அணிகிறார்கள்! அவர்கள் அதை வேறு பெயரில் அழைத்தாலும், அந்த ஆடையின் வரலாறு ஒன்று தான்.  அபாயா என்பது உண்மையில் ஓர் "இஸ்லாமிய"‌ ஆடை அல்ல‌. ஒரு கால‌த்தில், கிரீஸ் போன்ற‌ ம‌த்திய‌த‌ரைக் க‌ட‌ல் நாடுக‌ளை சேர்ந்த‌ கிறிஸ்த‌வ‌ப் பெண்க‌ளும் அபாயா அணிந்தார்க‌ள். ஏனென்றால் அது அந்த‌ப் பிராந்திய‌ ம‌க்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ உடை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் கிரேக்கப் பெண்கள் அபாயா அணிந்தனர். முகத்தை மூடும் பழக்கம் கூட அவர்களிடம் இருந்தது.  போர்த்துக்கல் நீண்ட காலமாக இஸ்லாமிய மூர்களின் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதனால் அரேபியக் கலாச்சாரத்தின் பல கூறுகள், போர்த்துக்கல் மக்களால் இன்று வரை பின்பற்றப் பட்டு வருகின்றன. போர்த்துகீசிய மொழியில் அபாயாவை "கவுன்" என்று அழைத்தனர்.  பதினாறாம் நூற்றாண்டில் இலங்கையை காலனிப் படுத்திய போர்த்துக்கேயர்கள், அபாயாவை கவுன் என்ற பெயரில் அறிமுகப் படுத்தினார்கள். அதை இன்றைக்கும் இந்து(மற்றும் கிறிஸ்தவ) த‌மிழ்ப் பெண்க‌ள் வீடுக‌ளில்

இலங்கையில் "இன/மத முரண்பாடு" எனும் வர்க்கப் பிரச்சினை

இல‌ங்கையில் தற்போது தீவிர‌ம‌டைந்துள்ள‌ ம‌த/இன‌ முரண்பாடுக‌ளுக்கு பின்னால் உள்ள‌தும் வ‌ர்க்க‌ப் பிர‌ச்சினை தான். அதை ஓர் உதார‌ண‌ம் மூல‌ம் விள‌க்க‌லாம். மதவாதம், இனவாதம் எல்லாம் வர்க்க முரண்பாடுகளை மறைப்பதற்கான முகமூடிகள் தான். தன் நாட்டு மக்கள் எல்லோரும் அந்த முகமூடிகளை வாங்கி அணிய வேண்டுமென்று ஆளும் வர்க்கம் விரும்புகிறது. இதற்கென தயாராக இருக்கும் இனவாத அறிவுஜீவிகள், ஊடகங்கள், சமூக வலைத்தலங்களில் நச்சுக் கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் படிப்பறிவு குறைந்த பாட்டாளிவர்க்க மக்களை இனவாதக் கருத்துக்களால் மூளைச் சலவை செய்கின்றனர். அண்மையில் வ‌ட மேல் மாகாண‌த்தில் ந‌ட‌ந்த‌ முஸ்லிம் விரோத‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ளில் வ‌ன்முறையில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள் சிங்க‌ள‌ அடித்த‌ட்டு ம‌க்க‌ள். அதாவ‌து, லும்ப‌ன்க‌ள் என‌ப்ப‌டும் உதிரிப் பாட்டாளி வ‌ர்க்க‌த்தின‌ர். முஸ்லிம்க‌ளின் வீடுக‌ள், க‌டைக‌ளை கொளுத்தி, அங்கிருந்த‌ பொருட்க‌ளை சூறையாடியுள்ள‌ன‌ர். ஒரு தொழிற்சாலையில் வேலை செய்த‌ தொழிலாள‌ர்க‌ளே சீருடையில் சென்று கொளுத்தி உள்ள‌ன‌ர். அவ‌ச‌ர‌ கால‌ச் ச‌ட்ட‌ம் அமுலில் இருந்தாலும், வ‌ன்முறையில் ஈடுப‌ட்ட‌ ப‌

பாகிஸ்தானில் சீன முதலீடுகளுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள்

பாகிஸ்தானில் குவாட‌ர் துறைமுக‌ ந‌க‌ர‌த்தில் உள்ள‌ Pearl Continental எனும் ஆடம்பர ஹொட்டேலில், இம்மாத‌ம் ந‌ட‌ந்த‌ (ப‌ய‌ங்க‌ர‌வாத‌) துப்பாக்கிச் சூட்டுத் தாக்குத‌லில் ஒரு க‌ட‌ற்ப‌டையின‌ர் உட்ப‌ட‌ 5 பேர் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். ப‌லுசிஸ்தான் விடுத‌லை இய‌க்க‌த்தின் (BLA) ம‌ஜீத் அணி தாக்குத‌லுக்கு உரிமை கோரியுள்ள‌து. அதிக‌ள‌வு ஊட‌க‌ க‌வ‌னத்தை க‌வ‌ராத‌ இந்த‌த் தாக்குதல், நவீன துறைமுக‌ ந‌க‌ர‌மான‌ குவாட‌ரில் பெரும‌ள‌வு ப‌டையின‌ர் குவிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ பாதுகாப்பு வ‌லைய‌த்தினுள் ந‌ட‌ந்துள்ள‌து. சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர், நகருக்கு வெளியே பேருந்து வ‌ண்டிகளில் சென்ற‌ பாதுகாப்புப் ப‌டையின‌ரும், சீன‌ தொழிலாள‌ர்க‌ளும் வ‌ழி ம‌றித்து சுட்டுக் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் க‌ராச்சி ந‌க‌ரில் உள்ள‌ சீன‌ துணைத் தூத‌ர‌க‌த்தில் ந‌ட‌ந்த‌ தீவிரவாதத் தாக்குதலில், சீன விசாவுக்கு விண்ணப்பித்த இரண்டு பொது மக்களும், பாதுகாவலருமாக நான்கு பேர் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். ஏன் இந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் பொதுவாக‌ ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌ங்க‌ளில் அறிவிக்க‌ப் ப‌டுவ‌தில்லை? அத‌ற்குக் கார‌ண‌ம் இந்த‌த் தீவிர‌வாத‌த் தாக்குத‌ல்க