முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்

நான் ஸ்ரீலங்கன் இல்லை.... நான் தமிழீழன் இல்லை....

நான் ஸ்ரீலங்கன் இல்லை. நான் தமிழீழன் இல்லை. நான் இந்தியன் இல்லை. நான் பிரித்தானியன் இல்லை. உலகம் இருநூறு தடுப்பு முகாம்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அந்த முகாம்களை தேசம் என்றழைக்கிறார்கள். தடுப்பில் உள்ள மனிதர்களின் நன்னடத்தையை குடியுரிமை என்கிறார்கள். முகாம்களுக்கு இடையில் சென்று வர கடவுச்சீட்டு கொண்டு செல்ல வேண்டும். இதைத் தான் சுதந்திரம் என்று தந்திரமாக மூளையை சலவை செய்கிறார்கள். நான் ஸ்ரீலங்கன் இல்லை. நான் தமிழீழன் இல்லை. - கலையரசன் 16-05-2020