முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பயங்கரவாத பழி சுமத்தப்பட்ட அப்பாவி அரபு இளைஞன் பற்றிய ஸ்பானிஷ் படம்

"La víctima número 8" (எட்டாவது பலி) என்ற ஸ்பானிஷ் தொலைக்காட்சித் தொடர் Netflix இல் காணக் கிடைக்கிறது. ஒரு நாட்டின் அரச புலனாய்வுத்துறையினர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலை நடத்தி விட்டு, அதைச் செய்தவர்கள் ஜிகாதி தீவிரவாதிகள் என்று சொல்லி ஒரு அப்பாவி அரபு இளைஞனை பலியாடு ஆக்குவது தான் கதைக்கரு. படத்தில் ஒமார் ஜமால் என்ற அரபு இளைஞனாக ஒரு ஸ்பானிஷ் நடிகரே நடித்துள்ளார். தமிழில் வெளியான விசாரணை படத்தின் பாணியில் தான் இந்தத் தொடர் எடுக்கப் பட்டுள்ளது. ஸ்பெயினில், பில்பாவோ நகரில், "இஸ்லாமிய பயங்கரவாதம்" என்ற பெயரில் அரச புலனாய்வுத்துறை வைத்த குண்டு வெடித்து எட்டுப் பேர் பலியாகின்றனர். ஒரு அப்பாவி அரேபிய இளைஞனை கடத்திச் சென்று, "இவன் தான் அந்த குண்டு வைத்த ஜிகாதி தீவிரவாதி" என்று பழி சுமத்துகின்றனர். ஊடகங்களும் அதையே ஒப்புவிப்பதால் நாடு முழுவதும், முஸ்லிம் குடியேறிகள் உட்பட, அனைத்து மக்களும் அதை உண்மையென்று நம்புகிறார்கள். ஆனால், அந்த இளைஞன் குற்றமற்றவன் என்பதை அவனது தாயும், காதலியும் மட்டுமே நம்புகிறார்கள். இறுதியில் உண்மை வெளிவந்ததா என்பதை படத்தைப் பார்த்த