முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிரியா மீதான துருக்கி இராணுவ படையெடுப்பு

வ‌ட‌ மேற்கு சிரியாவில் உள்ள‌ அப்ரின் (Afrin) ந‌க‌ர‌ம் துருக்கிப் ப‌டையின‌ர் வ‌ச‌ம் வீழ்ந்து விட்ட‌து. இதுவ‌ரை கால‌மும் குர்திஸ் YPG ப‌டையின‌ர் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ அப்ரின் ந‌க‌ரில் த‌ற்போது துருக்கி கொடி ப‌ற‌க்கிற‌து. துருக்கி ப‌டைக‌ள் அப்ரின் ந‌க‌ரை கைப்ப‌ற்றுவ‌த‌ற்காக‌‌ ந‌ட‌ந்த‌ யுத்த‌த்தில், இதுவ‌ரையில் 300 க்கும் அதிக‌மான‌ பொதும‌க்க‌ள் பலியாகி உள்ள‌ன‌ர். ஒரு இல‌ட்ச‌த்து ஐம்ப‌தாயிர‌ம் பேர் இட‌ம்பெய‌ர்ந்துள்ள‌ன‌ர். அப்ரின் மீதான‌ வெற்றியை பிர‌க‌ட‌ன‌ம் செய்துள்ள‌ துருக்கி ஜ‌னாதிப‌தி எர்டோகான், "த‌ம‌து ப‌டையின‌ர் 3000 க்கும் மேற்ப‌ட்ட‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளை கொன்று விட்ட‌தாக‌வும், எஞ்சியோர் வாலை சுருட்டிக் கொண்டு ஓடி விட்ட‌தாக‌வும்" தெரிவித்தார். இருப்பினும் போர் இன்னும் ஓய‌வில்லை என்று குர்திஸ் YPG இய‌க்க‌ம் அறிவித்துள்ள‌து. போர் த‌ற்போது வேறொரு க‌ட்ட‌த்திற்கு ந‌க‌ர்ந்துள்ள‌தாக‌ தெரிவித்த‌ன‌ர். அநேக‌மாக‌ YPG ஒரு நீண்ட‌ கெரில்லா யுத்த‌த்திற்கு த‌யார்ப‌டுத்தலாம் என‌த் தெரிய‌ வ‌ருகின்ற‌து. சிரியாப் போர் தற்போது வேறொரு கட்டத்தை வந்தடைந்துள்ளது. குர்திஷ் போராளிகளின்

மருத்துவர்களின் கடமையை உணர்த்தும் பார்பரா (Barbara) - சினிமா விமர்சனம்

ஜெர்மன் மொழிப் படமான "Barbara", முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில், எண்பதுகளில் நடக்கும் கதை ஒன்றை சொல்கின்றது. பெர்லின் நகரில் கடமையாற்றிய இளம் பெண் மருத்துவரான பார்பரா, விசாவுக்கு விண்ணப்பித்த காரணத்தால், புலனாய்வுத்துறையின் (Stasi) சந்தேகத்திற்கு ஆளாகின்றார். அதனால், தொலைதூரத்தில் உள்ள பால்ட்டிக் கடலோரம், ஒரு நாட்டுப்புற மருத்துவமனைக்கு இடம் மாற்றப் படுகின்றார்.  "சோஷலிச சர்வாதிகாரத்தை" வெறுக்கும் பார்பரா, தனது மேற்கு ஜெர்மன் காதலனின் உதவியுடன், நாட்டை விட்டு தப்பிச் செல்லத் திட்டமிடுகிறார். இறுதியில் மனம் மாறி, கிழக்கு ஜெர்மனியில் தங்கி விடுகிறார். பார்பரா, கிழக்கு ஜெர்மன் அரசையும், வாழ்க்கையையும் வெறுப்பதை, பார்பரா படம் முழுவதும் வெளிப்படுத்தி வருகிறார். ஓரிடத்தில், சோஷலிச அரசாங்கம் தனது இட மாற்றத்திற்கு கூறிய காரணத்தை விரக்தியுடன் கூறுகின்றார்: "உனது மருத்துவப் படிப்புக்கு தொழிலாளர்களும், விவசாயிகளும் செலவு செய்துள்ளனர். நீ அந்தக் கடனை அடைக்க வேண்டும்..." அதைக் கேட்கும், தலைமை மருத்துவர், "அந்தக் காரணம் தவறானது அல்லவே!" என்

இனப்படுகொலையும் மேற்கத்திய சட்டங்களும்

"ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை, உலக நாட்டு மக்கள் அத்தனை பேரும் கண்டிக்க வேண்டும்" என்று எதிர்பார்க்கும் தமிழ் இன உணர்வாளர்கள், அதனை மேற்கத்திய சட்டங்களுக்கு உட்பட்டு நடைமுறைக்கு கொண்டு வர முடியாது. அவர்கள் முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. மேற்கத்திய முதலாளித்துவ நலன் சார்ந்த சட்டம் எதுவும், இனப்படுகொலைகளை தடுப்பதற்காக எழுதப் பட்டதல்ல. மிகவும் பிரபலமான, நியூரன்பேர்க் நீதிமன்றம் கூட, மிகவும் குறைந்தளவு நாஸி குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை வழங்கியது. யூத இனப்படுகொலையில் ஈடுபட்ட பெரும்பான்மையான நாஸிகள், அமெரிக்காவிலும், பிற மேலைத்தேய நாடுகளிலும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று? சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பினார்கள் என்று சாமானியர்களின் மொழியில் கூறலாம். உண்மையில், மேற்கத்திய சட்டம் எப்போதும் ஆதாரங்களை வைத்துக் கொண்டு தான் தண்டனை வழங்கும். ஆதாரம், சாட்சிகள் இல்லாவிட்டால், எந்தக் குற்றவாளியும் தப்பி விடலாம். இதனால், சோஷலிச நாடாக இருந்த கிழக்கு ஜெர்மனியில் ஒரு புதிய சட்டத் திர

புலி ஆதரவாளர் வேஷம் போடும் தமிழ்த் தேசிய வலதுசாரிகள்

தமிழீழம் கிடைத்திருந்தால், அதற்காக தமது உயிரை அர்ப்பணித்து போராடிய போராளிகளுக்கு தான், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.  அதற்காக தனியான ஒதுக்கீடு கொண்டு வரப் பட வேண்டும். போராடப் போகாமல் சொகுசாக வாழ்ந்து, பல்கலைக்கழகம் வரை படித்து முடித்தவரைத் தான், வேலைகளுக்கான நேர்முகப் பரீட்சையில் தேர்ந்தெடுக்கக் கூடாது.  தனி நாடு கிடைத்த பின்னர் போராளிக்கு வேலை கிடைக்காது என்றால், பிறகென்ன ...... அவன் போராட வேண்டும்? தனி நாடு கிடைத்த பயனை, போராடாமல் சொகுசாக வாழ்ந்த ஒருவன் அனுபவிக்கிறான் என்றால், அந்த தனி நாடு எதற்கு? அது யாருக்கான விடுதலை? ஈழத்தில் "புலி ஆதரவாளர்" வேஷம் போடும், வலதுசாரிகளின் சுயரூபத்தை அறிந்து கொள்ள ஒரு வழியுள்ளது. புலிகளின் ஆட்சிக் காலத்தில், "தமிழர் ஒற்றுமையை குலைக்கும் சாதி வெறியர்கள்", "தமிழர்களை சுரண்டும் முதலாளிகள்" ஆகியோரை, சமூகவிரோதிகளாக அறிவித்து, மரண தண்டனை விதித்திருக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். அந்த நிமிடத்தில் இருந்து, அவர்கள் புலி எதிர்ப்பாளராக மாறி விடுவார்கள். திடீரென புலிகளின் மனித உரிமை மீற

இந்திய விடுதலைப் போராட்டத்தில் லெனினின் பங்களிப்பு

இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு லெனின் உதவிய வரலாறு தெரியாத தற்குறிகளான பாரதீய நாஜிக் கட்சியினர் கவனத்திற்கு: பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடிய, எம்.என்.ராயின் கம்யூனிச புரட்சிப் படை பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் அளவிற்கு அது ஊடகங்களினால் பேசப் படாமை ஒரு காரணமாக இருக்கலாம். வங்காளி புரட்சிவீரர் எம்.என்.ராய், பிரிட்டிஷாருக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய காரணத்தால் தேடப் பட்டு வந்தார். அவர் மெக்சிகோ சென்று, மொமிண்டேர்ன் பிரதிநிதியை சந்தித்தார். அன்றிலிருந்து மார்க்சிஸ்டாக மாறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தத்தில் மட்டுமல்லாது, மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியதில் அவரது பங்களிப்பும் இருந்துள்ளது. போல்ஷெவிக் புரட்சியின் தலைவர் லெனினை சந்திந்த முதலாவது இந்தியர் எம்.என்.ராய் தான். லெனினின் நன்மதிப்புக்கு உரியவராக இருந்த படியால், இந்தியப் புரட்சிக்கு ஆதரவை பெற்றுக் கொண்டார். லெனினின் பணிப்பின் பேரில், மத்திய ஆசியாவில், தாஷ்கென்ட் நகரில், இந்திய விடுதலைப் படை உருவாக்கப் பட்டது. எம்.என். ராயின் புரட்சி

இனவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகாதீர் தமிழர்களே!

இனவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு பலியாகாதீர்கள் தமிழர்களே! //வன்னியில் இறுதி யுத்தம் நடந்த போது "அவர்கள்" (முஸ்லிம் மக்கள்) வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதனால், "நாங்கள்"(தமிழ் மக்கள்) ஏன் "அவர்களுக்காக" குரல் கொடுக்க வேண்டும்?// இப்படிப் பேசுவதும், பதிவிடுவதும் இனவாதத்தை ஆதரிக்கும் செயல் ஆகும். எல்லாவற்றுக்கும் முதலில், மக்களை இன அடிப்படையில் "நாங்கள்", "அவர்கள்" என்று பிரிப்பது இனவாதத்தின் பாலபாடம் ஆகும். அப்போது நடந்த இறுதி யுத்தம், அமெரிக்கப் பாணியில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று அறிவிக்கப் பட்டு தான் நடந்தது. அதனை அமெரிக்காவும் ஆமோதித்தது என்பது வேறு விடயம். இறுதிப் போரின் வெற்றியானது புலிகள் இயக்கத்திற்கு எதிரான வெற்றியாக கருதப் பட்டது. பொது மக்களில் பெரும் பகுதியினர், எப்படியாவது போர் முடிந்தால் சரி என்றும் நினைத்தனர். அதை "தமிழினத்திற்கு எதிரான வெற்றி" யாக எடுத்துக் கொண்டவர்கள் இனவாதிகள் மட்டுமே. அது ஒட்டுமொத்த சிங்கள, முஸ்லிம் மக்களின் கருத்து அல்ல. பெரும்பாலான சிங்

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல்

மார்ச் 8: சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் பற்றிய உண்மைகள்

சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் பற்றி, வெளியில் தெரியாத சில உண்மைகள். - சர்வதேச மகளிர் தினம் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. - ஜேர்மனிய சோஷலிச பெண்ணியவாதி கிளாரா ஜெட்கின், 1910 ம் ஆண்டு நடந்த பெண்கள் மகாநாட்டில் முன்மொழிந்தார். - அமெரிக்காவில் நெசவுத் தொழிலாளரின் வேலை நிறுத்தப் போராட்டத்தை நினைவுகூருவதற்காக, ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 28 அன்று மகளிர் தினமாக கொண்டாடப் பட்டது. - 1917 ம் ஆண்டு, சார் மன்னனை வீழ்த்திய பெப்ரவரி புரட்சியின் பின்னர், ரஷ்யப் பெண்களும் அந்தத் தினத்தை கொண்டாடினார்கள். - ரஷ்யக் கலண்டரின் படி, பெப்ரவரி 28 ம் தேதி, மார்ச் 8 வருகின்றது. - லெனின், மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தார். உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், அந்த தினத்தை பெண்களின் உரிமைகள் மீதான கவனத்தைக் கோரியது. -1977 ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை, மார்ச் 8, சர்வதேச மகளிர் தினமாக பிரகடனம் செய்தது. (இங்கேயுள்ள நிழற்படம், ஆம்ஸ்டர்டாம் நகரில் இடம்பெற்ற பேரணியில் எடுக்கப் பட்டது.)

ஒரு சோஷலிச சமுதாயத்தில் குற்றங்கள் நடப்பது மிகக் குறைவு

"கொலை, வன்முறை, பாலியல் தொழில் ஆகிய குற்றச் செயல்கள் எல்லாம், முதலாளித்துவத்தின் விளைவுகள். சோஷலிச சமுதாயத்தில் மக்களுக்கு எந்தக் குறையும் இல்லாததால், பொறாமைக்கும், பேராசைக்கும் அங்கே இடமில்லை."  முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனி (ஜெர்மன் ஜனநாயக குடியரசு) இவ்வாறு கூறி வந்தது. அந்த நாட்டில் குற்றச் செயல்கள் மிக அரிதாகவே நடந்தன. புள்ளிவிபரங்கள் அதனை மெய்ப்பிக்கின்றன.  1960 க்கும் 1970 க்கும் இடைப்பட்ட காலத்தில், மேற்கு ஜெர்மனியில், ஒரு இலட்சம் பேருக்கு 6200 குற்றச் செயல்கள் நடந்துள்ளன. அதே நேரம் கிழக்கு ஜெர்மனியில், அதே காலப் பகுதியில், அதே அளவு சனத்தொகைக்கு, வெறும் 550 குற்றச்செயல்கள் மட்டுமே நடந்துள்ளன.  எல்லைகளில் கடுமையான கண்காணிப்பின் காரணமாகவும், அந்நிய நாணயப் பற்றாக்குறை காரணமாகவும், போதைவஸ்து கடத்தல் போன்ற குற்றங்கள் நடப்பதற்கு வாய்ப்பிருக்கவில்லை. மக்களின் காவலர்கள் (Volkspolizei) என்ற பெயரைக் கொண்ட காவல் துறை, பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களையும், குற்றங்களுக்கான காரணங்களையும் உடனுடக்குடன் கண்டுபிடித்து தீர்த்து வைத்தது.  மக்கள் மீதான அதீத க

சோஷலிச கிழக்கு ஜெர்மனி பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்

முன்னாள் கம்யூனிச கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த நண்பர் ஒருவர், எனக்கு கணனியின் பாகங்களை பகுதி பகுதியாக பிரித்துப் போட்டு, பின்னர் பொருத்தி முழுமையான கணணியாக்குவது எப்படி என்று காட்டித் தந்தார். பெர்லின் மதில் விழும் பொழுது, அவருக்கு பத்து வயதாக இருந்திருக்கலாம். அந்த நண்பர், தனது செயலை ஒரு உதாரணம் மூலம் புரிய வைத்தார். ஒரு முதலாளித்துவவாதி, பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை சாப்பிடக் கொடுத்து விட்டு, பின்னர் அவன் கஷ்டப் பட்டு வேலை செய்து, மீன் வாங்கிச் சாப்பிட வேண்டுமென்று எதிர்பார்ப்பான். அதே நேரம், ஒரு பொதுவுடமைவாதி பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதுடன், அவனாகவே மீன் பிடித்து உண்பது எப்படி என்றும் காட்டிக் கொடுப்பான். மக்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்காமல், அறியாமையில் வைத்திருந்தால் தான், முதலாளி கோடி கோடியாக இலாபம் சம்பாதிக்க முடியும். "நமது தமிழ் மக்களுக்கு கம்யூனிசம் தேவையில்லை. இன்று யாருமே அதை பொருட் படுத்துவதில்லை. மக்கள் இடதுசாரிகளை வெறுக்கிறார்கள்..." என்றெல்லாம் மெத்தப் படித்த அறிவாளிகள் கூட உளறித் திரிகின்றார்கள். அவர்கள் மனதில் குடி கொண்டிருக்கும்

வட கொரிய அதிபருக்கு சமாதானத்திற்கான சர்வதேச விருது!

வட கொரிய எதிர்ப்பாளர்களுக்கு சில  அதிர்ச்சியான தகவல்கள்: 1. இந்தோனேசியாவின் பெரும் மதிப்புக்குரிய "சுகார்னோ கல்வி நிலையம்", வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இற்கு, சமாதானத்திற்கான விருது வழங்கி கௌரவித்துள்ளது.  ஏற்கனவே இந்த நிலையம், அதே விருதை மகாத்மா காந்திக்கு வழங்கி இருந்தது. இந்த விருது தொடர்பாக, மேற்கத்திய நாடுகளில் கடுமையாக விமர்சிக்கப் பட்ட போதிலும், இந்தோனேசிய அரசு அதனை நியாயப் படுத்தி பேசி வருகின்றது. தமிழ் பேசும் ஏகாதிபத்திய அடிவருடிகளும், இந்தத் தகவலை கேள்விப்பட்டு "அறச் சீற்றத்தை" வெளிப்படுத்தலாம்.  வட கொரியா என்றவுடன், வரிந்து கட்டிக் கொண்டு எதிர்க்கும் போலி ஜனநாயக கோமாளிகள், ஒபாமாவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுத்த நேரம் வாயே திறக்கவில்லை. ஒரு சிறு முணுமுணுப்பை கூட எதிர்ப்பாக தெரிவிக்காமல், ஏழு உலக நாடுகள் மீது படையெடுத்து, பல இலட்சம் மக்களை கொன்று குவித்த ஒபாமாவுக்கு பரிசு கொடுத்ததை ஆமோதித்தார்கள். இது தான் வட கொரிய எதிர்ப்பாளர்களின் இரட்டை வேடம்.  2. "வட கொரியர்கள் திருமணத்திற்கு முன்னர் உடலுறவு வைத்துக் கொள்வதில்லை. அத

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்