முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்று குலாக் சிறை முகாம் இன்று பெரும் நகரம்

இது முன்னாள் சோவிய‌த் குடிய‌ர‌சான‌ க‌ச‌க‌ஸ்தான் நாட்டில் உள்ள‌ க‌ர‌க‌ன்டா (Karaganda) ந‌க‌ர‌ம். இது ஸ்டாலின் கால‌த்தில் குலாக் (Gulag) சிறை முகாமாக‌ இருந்த‌து என்றால் ந‌ம்ப‌ முடிகிற‌தா? கிட்ட‌த்த‌ட்ட‌ குவைத் நாடு அள‌வு ப‌ர‌ப்ப‌ள‌வை கொண்ட‌, வெறும் புல்த‌ரை நில‌த்தில் அமைக்க‌ப் ப‌ட்ட‌ குலாக் முகாம்க‌ளில், இல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ "வ‌ர்க்க‌ விரோதிக‌ளை" கொண்டு வ‌ந்து த‌டுத்து வைத்திருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் க‌டும் உழைப்பினால் க‌ட்டியெழுப்பிய‌து தான் இந்த‌ப் பிர‌மாண்ட‌மான‌ ந‌க‌ர‌ம். நில‌க்க‌ரி சுர‌ங்க‌ம் பிர‌தான‌மான‌ தொழிற்துறையாக‌ இருந்தது. ஆர‌ம்ப‌ கால‌த்தில் நிலைமை மோச‌மாக‌த் தான் இருந்த‌து. க‌ட்டாய‌ வேலை, உண‌வுப் ப‌ற்றாக்குறை எல்லாம் இருந்த‌து. ஆனால் அது இர‌ண்டாம் உல‌க‌ப் போர் முடியும் வ‌ரை தான். அப்போது குலாக் முகாம்களில் குறிப்பிடத்தக்க அளவு "போர்க் கைதிகளும்" இருந்தனர். உலகப் போரில் "ஜேர்ம‌ன் நாஸிப் ப‌டையெடுப்பாள‌ர்க‌ளை ஆத‌ரித்தார்க‌ள்" என்ற‌ குற்ற‌ச்சாட்டில், சோவிய‌த் மேற்குப் பிர‌தேச‌ங்க‌ளில் இருந்து வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ தேசிய‌ இன‌ங்க‌ளையும் க‌ர‌க‌ண்ட

பெர்லின் ம‌தில் ம‌றைய‌வில்லை! இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இப்போதும் உண்டு!!

சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னி இருந்த கால‌த்தில் பெர்லின் ம‌திலை "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில்" என்று அழைத்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ர்க‌ள் அதை நையாண்டி செய்து‌ "க‌ம்யூனிச‌ பிர‌ச்சார‌ம்" என்று புற‌க்க‌ணித்த‌ன‌ர். இப்போது கிழ‌க்கு ஜேர்ம‌ன் ம‌க்க‌ள் தாமாக‌வே "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில் இருந்த‌து ந‌ல்ல‌த‌ற்கே!" என்று கூறுகிறார்க‌ள். "நாங்க‌ள் பாசிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ளின் தாய‌க‌ம் ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதையிட்டு பெருமைப் ப‌ட‌ வேண்டும்." என்று சொல்லிக் கொள்கிறார்க‌ள். (இத‌ற்கு மாறாக‌, மேற்கு ஜேர்ம‌னியில் நாஸிச‌ க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ வெட்க‌ உண‌ர்வு இருக்கிற‌தே அல்லாம‌ல், பாசிச‌ எதிர்ப்புண‌ர்வு இருக்க‌வில்லை.) அங்கு இப்போதும் இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? முன்னாள் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளுக்கு ம‌திப்பில்லை. அர‌ச‌, த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌த‌வி வ‌கிப்போரில் பெரும்பான்மையின‌ர் மேற்கு ஜேர்ம‌னியில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். அத‌னால் வேல‌யில்லாப் பிர‌ச்சினை அதிக‌ம். ஜேர்மனியின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்று கூட

சிரியாவில் என்ன‌ ந‌ட‌க்கிற‌து?

எதிரும் புதிருமாக‌ காண‌ப்ப‌டும் முத‌லாளிய‌- த‌மிழ் வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளும், சுன்னி- இஸ்லாமிய‌ அடிப்படைவாதிக‌ளும், வ‌ல‌துசாரி த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளும் ஓர‌ணியில் நின்று சிரியாவுக்காக‌ அழுகிறார்க‌ள் என்றால், பின்ன‌ணியில் ஏதோ ஒரு அர‌சிய‌ல் ச‌க்தி அவ‌ர்க‌ளை ஒன்றிணைக்கிற‌து என்று அர்த்த‌ம். ஒரு மாத‌த்திற்கு முன்ன‌ர் வ‌ட‌ மேற்கு சிரியாவில் உள்ள‌ அப்ரின் பிர‌தேச‌ம் துருக்கி ப‌டையின‌ரால் தாக்க‌ப் ப‌ட்ட‌து. அப்போதும் பொது ம‌க்க‌ளின் உயிரிழ‌ப்புக‌ள், சொத்த‌ழிவுக‌ள் அதிக‌மாக‌ இருந்த‌ன‌. விமான‌க் குண்டுத் தாக்குத‌லில் ப‌லியான‌ குழந்தைக‌ளின் ப‌ட‌ங்க‌ள் வெளியாகின‌. அது குறித்து ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் எந்த‌ எதிர்வினையும் எழ‌வில்லை. எங்கும் க‌ள்ள‌ மௌன‌ம் நில‌விய‌து. அப்ரின் பிர‌தேச‌த்தில் ப‌லியான‌ ம‌க்க‌ளின் அவ‌ல‌க் குர‌ல் வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளின் காதுக‌ளை எட்ட‌வில்லை. அங்கு கொல்ல‌ப் ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளுக்காக‌ யாரும் அழ‌வில்லை. அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளை யாரும் பார்க்க‌வில்லை. ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் செய‌ற்ப‌டும் ஒருவ‌ர் கூட‌ கொந்த‌ளிக்க‌வில்லை. ஏன்? ஏன்? ஏன்? குர்திய‌ர்க‌ளும் சுன்னி முஸ்லிம்க

இஷ்காஷிம் - ஒரு நகரம், இரண்டு கதைகள்

ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சிறிய நகரம் இஷ்காஷிம் (Ishkashim). 19 நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், பிரிட்டிஷ், ரஷ்ய வல்லரசுகளுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டி காரணமாக இரண்டாகப் பிரிக்கப் பட்டது. ஒரு ஆற்றுக்கு வடக்கே இருந்த பகுதி ரஷ்யாவுடனும், தெற்கே இருந்த பகுதி ஆப்கானிஸ்தானுடனும் சேர்க்கப் பட்டது. அதற்குக் காரணம், அன்றைய காலத்தில் காலனிய விஸ்தரிப்பில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் இந்தியாவும், ரஷ்ய சாம்ராஜ்யமும் ஒரே எல்லையில் சந்தித்துக் கொண்டன. இரண்டு சாம்ராஜ்யங்களுக்கும் இடையிலான நீண்ட எல்லைப் பகுதி தனியாக பிரிக்கப் பட்டு, ஆப்கானிஸ்தானுடன் இணைக்கப் பட்டது. இதற்காக அங்கு வாழ்ந்த மக்களின் விருப்பத்தை யாரும் கேட்கவில்லை. ஒரே கிராமங்கள் ஒரே இரவில் இரண்டாகப் பிரிக்கப் பட்டன. அவ்வாறு பாதிக்கப் பட்ட பகுதி தான் இஷ்காஷிம். தாஜிக்கி மொழியுடன் தொடர்புடைய கிளை மொழி ஒன்றைப் பேசுகின்றனர். கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக, ஒரே நகரத்து மக்கள் இரண்டு வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். ஒரு ஆறு மட்டுமே அவர்களைப் பிரிக்கிறது. ஒரு பாலம் மட்டுமே அவர்களை இணைக்கிறது. வாரத்திற்கு ஒரு