"கிம் தேசம்" தெரிந்தவர்களுக்கு "சாம்சுங் தேசம்" தெரியுமா? வட கொரியாவில் நடக்கும் மன்னராட்சி பற்றி பாடம் நடத்துவோருக்கு, தென் கொரியாவில் நடக்கும் கம்பனி ஆட்சி கண்ணில் படாததேன்? அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட பழமைவாதக் கட்சிப் பிரதமர் பதவி விலகி தேர்தல் நடந்தது. சாம்சுங் நிறுவனம் சம்பந்தப் பட்ட ஊழல் குற்றம் நிரூபிக்கப் பட்டதால், மக்கள் எழுச்சிக்குப் பின்னர் பதவி விலகினார். இன்று உலகம் முழுவதும் விற்பனையாகும் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் சாம்சுங் கம்பனியை அறியாதவர் எவருமில்லை. ஆனால் அந்தக் கம்பனி தென் கொரியாவை ஆளும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்பது பலருக்குத் தெரியாது. தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் மயமாக இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் கழகம், சாம்சுங் மருத்துவ மனை, சாம்சுங் பல்கலைக்கழகம், சாம்சுங் துறைமுகம்..... இப்படி முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய பொருளாதாரத்தின் பெரும் பகுதி சாம்சுங் கையில் உள்ளது. பல்லாயிரக்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA.