முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இது புதினம் அல்ல: "காபியை சுத்தம் செய்த நெதர்லாந்து பிரதமர்"

//தரையில் தான் சிந்திய காபியை சுத்தம் செய்த நெதர்லாந்து பிரதமர். நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே நாடாளுமன்றத்தில் இருந்த அசுத்ததை தாமாகவே சுத்தம் செய்தார்.// ( BBC Tamil )  நெத‌ர்லாந்து பாராளும‌ன்ற‌த்தில், பிர‌த‌ம‌ர் மார்க் ருட்டே, தான் நில‌த்தில் கொட்டிய‌ காப்பியை தானே சுத்த‌ப் ப‌டுத்துகிறார். இதிலே என்ன‌ புதின‌ம் இருக்கிற‌து?  அந்த‌ நேர‌த்தில் பாராளும‌ன்ற‌ சுத்திக‌ரிப்பு தொழிலாள‌ர் இருந்த‌ போதிலும், அவ‌ர்க‌ளை விடாம‌ல் தானே சுத்த‌ப் படுத்துவ‌தில் என்ன அதிசயம் கண்டீர்? அது அவ‌ர‌து த‌வ‌று என்ப‌தால் தானே சுத்த‌ப் ப‌டுத்துகிறார். சரி தானே? அவ‌ர் அர‌சிய‌ல்வாதியாக‌ இருப்ப‌தால் கொஞ்ச‌ம் ஓவராக‌ சீன் போடுகிறார் என்று சொல்ல‌லாம். இங்குள்ள‌ ஊட‌க‌ங்க‌ள் அதை பெரிது ப‌டுத்துவ‌தில்லை.  நெத‌ர்லாந்து நாட்டில் இது வ‌ழ‌மையான விட‌யம். நாங்க‌ள் குப்பை போட்டால் அதை நாமே எடுத்துப் போட‌ வேண்டும் என்ப‌தை சிறு வ‌ய‌தில் இருந்தே பின்ப‌ற்றுகிறார்க‌ள். வச‌தியான ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ குடும்ப‌ம் என்றால் கூட‌ வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருப்ப‌தில்லை.  இன்ன‌மும் நில‌ப்பிர‌புத்துவ‌ மன‌நிலையில் இருந்

இஸ்ரேலில் வந்தேறி அமெரிக்கப் பெண்ணின் கொலைவெறி

படம் பார், பாடம் படி! வந்தேறி அமெரிக்கப் பெண்ணின் கொலைவெறிக்கு பலியான பூர்வீக பாலஸ்தீனப் பெண். இஸ்ரேல்- பாலஸ்தீனப் பிரச்சினையானது, இன்றைக்கும் தொடரும் ஒரு மேற்கத்திய காலனிய ஆக்கிரமிப்புப் போர். அதனால் தான், அங்கு நடக்கும் இனப்படுகொலை, போர்க் குற்றங்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் பூரண ஆதரவு வழங்குகிறது. ஒரு மருத்துவ தொண்டராக, கான் யூனிஸ் (காஸா) போராட்டக் களத்தில் காயமுற்றவர்களுக்கு உதவிய, ரஸான் அல் நஜார் என்ற இருபத்தியொரு வயது பாலஸ்தீன இளம்பெண் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். தொலைநோக்கி பொருத்தப் பட்ட சினைப்பர் துப்பாக்கியால், பட்டப் பகலில் குறிபார்த்து நெஞ்சில் சுட்டுள்ளனர். இது இஸ்ரேலிய படையினரின் போர்குற்றம் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை. இந்தப் போர்க்குற்றம் உலகம் முழுவதும் கண்டனங்களை எழுப்பி வரும் நேரத்தில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்களை அடக்கியொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில், காஸா போராட்டக் காரர்களை பாதுகாக்க வேண்டுமென்ற தீர்மானம் கொண்டு வரப் பட்ட நேரம், அமெரிக்கா மட்டுமே எதிர்த்து வாக்கள

யாழ் வடமராட்சி கடலில் பிடிக்கப்படும் இனவாத மீன்கள்

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பொருளாதாரப் பிரச்சினைகளை திசைதிருப்பும் வகையில், அதற்குள் இனவாதத்தை நுழைத்து பிழைப்பு அரசியல் நடத்துவதில் தமிழினவாதிகள் மகா கில்லாடிகள். யாழ் வடமராட்சி கிழக்கு கரையோரத்தில் சிங்கள, முஸ்லிம் மீனவர்கள் அத்துமீறி வந்து மீன்பிடிக்கிறார்கள் என்று, சில தினங்களுக்கு முன்னர் இனவாதிகள் சர்ச்சையை கிளப்பி விட்டனர். அவர்கள் சட்டவிரோத மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர். எமது பிரதேச வளங்களை சுரண்டுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டி இருந்தனர். அந்த சம்பவம் குறித்து தமிழினவாதிகள் மேற்கொண்டு தெரிவித்த கருத்து இது: "சிங்கள- முஸ்லிம் மீனவர்கள் ட்ரோலர் படகுகள், மற்றும் நவீன கடற்றொழில் உபகரணங்களை பாவிக்கிறார்கள். வடமராட்சி கிழக்குப் பிரதேச தமிழ் மீனவர்களிடம் அந்தளவு வசதி இல்லை" என்றும் கூறினார்கள். அதாவது, இது பொருளாதார வசதி சம்பந்தப் பட்ட விடயம் என்பதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள். இலங்கையில் வாழும் சிங்கள, முஸ்லிம் மீனவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் என்பது போலவும், தமிழ் மீனவர்கள் எல்லோரும் ஏழைகள் என்பது போலவும் கறுப்பு வெள்ளையாகப் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. எ