முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இனவாத பூர்க்கா தடை - நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை



நெதர்லாந்து அரசு கொண்டு வந்த இனவாத பூர்க்கா தடைச் சட்டத்திற்கு எதிராக, "நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி" (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை: 


இனவாத நிகாப்- தடை ஒழிக


ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நெதர்லாந்தில் பூர்க்கா தடை உள்ளது. இது இல்லாத ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்திருப்பது மட்டுமல்லாது, இனவாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது மொத்த சனத்தொகையில் 0.001% மட்டும் தான் (பூர்க்கா எனப்படும்) நிகாப் அணிகின்றனர்.

2005 ம் ஆண்டு, PVV கட்சித் தலைவர் வில்டர்ஸ் இந்த பிரேணையை முன்மொழிந்தார். வெளிப்படையாக இனவாத தன்மை கொண்ட ஒரு பிரேரணை, அர்த்தமற்ற விவாதங்கள் மூலம் பாலின சமப்படுத்தல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பூர்கா இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டு, பெண்ணியவாதிகள் எனப் படுபவர்களும், ஏராளமான ஆண்களும் இந்த ஆலோசனையை ஆதரித்து வருகின்றனர்.

அது தான் நெதர்லாந்தில் நிலவும் ஆணாதிக்க தன்மை கொண்ட, இனவாத பெண்ணியத்தின் கண்ணோட்டம். தாம் "சம உரிமை பெற்று விட்டதாக" கருதிக் கொள்ளும் வெள்ளையின பெண்கள், வேற்றினப் பெண்கள் எப்படி ஒடுக்கப் படுகிறார்கள் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். முதலாளித்துவ பத்திரிகைகளும் "ஒடுக்கப்படும் முஸ்லிம் பெண்கள்" என்ற படத்தை தான் காட்ட விரும்புகின்றன.

ஒடுக்கப்படும் பாலினம், மதம், அல்லது இனத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்று லெனின் எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். இஸ்லாத்தால் ஒடுக்கப்படும் பெண்களுக்காக வக்காலத்து வாங்கும் வெள்ளையினப் பெண்ணியவாதிகள், தொழிற்சந்தையில் அதே முஸ்லிம் பெண்கள் இனவாதத்தால் ஒடுக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது ஆச்சரியத்திற்குரியது.

எல்லா EU நாடுகளிலும், நெதர்லாந்தில் தான் முஸ்லிம்கள் அதிகளவில் பாகுபாடு காட்டப் படுகின்றனர். இங்கு நிறுவனமயப் படுத்தப் பட்ட இனவாதம் குறித்து யாரும் பேசுவதில்லை. உதாரணத்திற்கு அரச வரித்துறை வெள்ளையரல்லாத மக்கள் எல்லோரும் மோசடியாளர்கள் என்பது போன்று நடந்து கொள்கிறது. அதனால் குழந்தைகள் பராமரிப்பதற்கான இட வசதிகள் கிடைப்பதில்லை. ஒரு பக்கம் ஒடுக்கப்படும் முஸ்லிம் பெண்கள் பற்றிப் பேசிக் கொண்டே, மறுபக்கம் அதிகரித்து வரும் அரசியல்வாதிகளினதும், ஊடகங்களினதும் வன்முறை புறக்கணிக்கப் படுகின்றது.

இஸ்லாமிய அபாயம் என்று சொல்லி ஆளும் வர்க்கமும், ஊடகங்களும் எம் மனதில் விதைக்கும் அச்ச உணர்வு உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சனைகளை தீர்க்கப் போவதில்லை. வர்க்கப் போராட்டத்தை பலவீனப் படுத்தும் நோக்கில், மூலதனம் பயன்படுத்தும் கருவி தான் இனவாதம் என்று உறுதியாகக் கூறலாம். உழைக்கும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை முதலாளித்துவ சமுதாயத்தில் தீர்க்கப் படப் போவதில்லை. அந்த நிலைமையில் நிகாப் ஒடுக்குமுறையா இல்லையா என்ற விவாதத்தை புகுத்துவது ஒரு திசைதிருப்பும் உத்தி.

முதலாளித்துவம் இருக்கும் வரையில், தீவிர வலதுசாரிகளின் வெளிப்படையான பாலினப் பாகுபாடும் தொடரும். ஏனெனில் பாலினப் பாகுபாடு என்பது வர்க்க சமுதாயத்தினதும், முதலாளித்துவத்தினதும் ஒரு பகுதி தான். வேலையில்லாப் பிரச்சினை, வேலை நிச்சயமின்மை, வறுமை ஆகியன தொடர்ந்து இருக்கும் வரையில், உழைக்கும் பெண்கள் தான் கடுமையாகப் பாதிக்கப் படுவார்கள். அதனால் முதலாளித்துவத்தில் சுதந்திரம் இருக்க முடியாது.

உழைக்கும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் உண்மையான சுதந்திரம் கிடைப்பதற்கு, எந்த மதத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காத சோஷலிசம் அவசியம். பூர்க்கா தடை அதற்கு எந்த உதவியும் செய்யவில்லை. இன்னும் சொல்லப் போனால், அது உழைக்கும் வர்க்கத்தை பிளவு படுத்தும் வேலையை மட்டுமே செய்கிறது. அது பலரது அடிவயிற்றுக்குள் புகைந்து கொண்டிருந்த இஸ்லாமோபோபியா உணர்வுகளை மட்டுமே தூண்டி விடுகிறது. அதனால் பூர்க்கா தடை ஒழிக.

(நன்றி: Manifest, 22-08-2019)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல்

நான் ஸ்ரீலங்கன் இல்லை.... நான் தமிழீழன் இல்லை....

நான் ஸ்ரீலங்கன் இல்லை. நான் தமிழீழன் இல்லை. நான் இந்தியன் இல்லை. நான் பிரித்தானியன் இல்லை. உலகம் இருநூறு தடுப்பு முகாம்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அந்த முகாம்களை தேசம் என்றழைக்கிறார்கள். தடுப்பில் உள்ள மனிதர்களின் நன்னடத்தையை குடியுரிமை என்கிறார்கள். முகாம்களுக்கு இடையில் சென்று வர கடவுச்சீட்டு கொண்டு செல்ல வேண்டும். இதைத் தான் சுதந்திரம் என்று தந்திரமாக மூளையை சலவை செய்கிறார்கள். நான் ஸ்ரீலங்கன் இல்லை. நான் தமிழீழன் இல்லை. - கலையரசன் 16-05-2020