முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வட கொரியாவில் இந்த அழகான வீடு முற்றிலும் இலவசம்!


வட கொரியாவில் இந்த அழகான வீடு உங்களுக்கு முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது. வாடகையும் அதிகமில்லை. இரண்டு மாதம் வாடகை கட்டவில்லை என்ற காரணத்திற்காக யாரும் உங்களைப் பிடித்து தெருவில் விட மாட்டார்கள். இங்கே "வாடகை" என்பது பராமரிப்பு செலவுகளுக்கானது. பெரும்பாலும் புதிய வீட்டுமனைகள் எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்பதால் பராமரிப்புச் செலவுகளும் அதிகம். அது அங்கு குடியிருக்கும் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப் படுகிறது.

தொண்ணூறுகளுக்கு முன்னர் வட கொரியாவில் சோஷலிச அமைப்பு இருந்த காலத்தில் எழுதப்பட்ட சட்டம் இப்போதும் அமுலில் உள்ளது. ஒவ்வொரு குடும்பமும் தனியாக வீடு கிடைப்பதற்கான வசதிகளை அரசே செய்து கொடுக்கும். ஒரு குடும்பம் புதிய வீடொன்றுக்கு குடிபுகும் பொழுது "ipsajung" (குடிபுகுந்த பத்திரம்) எனும் பத்திரம் வழங்கப் படும்.

ipsajung பத்திரத்தில் "வசிப்பதற்கான அனுமதி" என்று தான் எழுதப் பட்டுள்ளது. ஆனால் காலாவதியாகும் திகதியோ, அல்லது குறிப்பிட்ட காலத்திற்கான ஒப்பந்தமோ அல்ல. ஆகையினால் மக்கள் தாம் "சொந்த வீட்டில்" வசிப்பதாக நம்பி வந்தனர். இன்று வரையில் யாரும் வீட்டை விட்டு வெளியேற்றப் படவில்லை என்பதால், மக்கள் அப்படி நம்பியதிலும் தவறில்லை.

முன்பிருந்த சோஷலிச காலகட்டத்தில் யாரும் தாம் குடியிருக்கும் வீட்டை விற்க முடியாது. ஏதாவது தேவையென்றால் இன்னொருவருடன் வீட்டை மாற்றிக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட இருவரும் நகரசபைக்கு சென்று பத்திரத்தில் உள்ள பெயரை மாற்றிக் கொண்டால் அது சட்டப்படி செல்லுபடியாகும்.

தற்காலத்தில் முதலாளித்துவ பொருளாதாரம் வந்த பின்னர் வீடுகளை வாங்குவதும் விற்பதும் அதிகரித்து வருகின்றது. பியாங்கியாங் நகரில் ஒரு இலட்சம் யூரோக்களும் வீடு விற்பனைக்கு விடப் படுகிறது. ஆனால், வட கொரியாவின் வீட்டு உரிமைச் சட்டம் மாற்றப் படாத காரணத்தால், வீடு விற்பதும், வாங்குவதும் சில நேரம் எதிர்காலத்தில் சட்ட ரீதியான பிரச்சனைகளை கொண்டு வரலாம். இருப்பினும், தற்போதைய வட கொரிய அரசாங்கம், முதலாளித்துவ நடவடிக்கைகளை கண்டும் காணாத மாதிரி விட்டுக் கொடுப்பதால், பலர் அதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல்

இனவாத பூர்க்கா தடை - நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை

நெதர்லாந்து அரசு கொண்டு வந்த இனவாத பூர்க்கா தடைச் சட்டத்திற்கு எதிராக, "நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி" (NCPN) வெளியிட்டுள்ள அறிக்கை:  இனவாத நிகாப்- தடை ஒழிக ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நெதர்லாந்தில் பூர்க்கா தடை உள்ளது. இது இல்லாத ஒரு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்திருப்பது மட்டுமல்லாது, இனவாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வெறும் 200 பேர் மட்டுமே, அதாவது மொத்த சனத்தொகையில் 0.001% மட்டும் தான் (பூர்க்கா எனப்படும்) நிகாப் அணிகின்றனர். 2005 ம் ஆண்டு, PVV கட்சித் தலைவர் வில்டர்ஸ் இந்த பிரேணையை முன்மொழிந்தார். வெளிப்படையாக இனவாத தன்மை கொண்ட ஒரு பிரேரணை, அர்த்தமற்ற விவாதங்கள் மூலம் பாலின சமப்படுத்தல் என்ற கட்டத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பூர்கா இஸ்லாமியப் பெண்களை ஒடுக்குகிறது என்று சொல்லிக் கொண்டு, பெண்ணியவாதிகள் எனப் படுபவர்களும், ஏராளமான ஆண்களும் இந்த ஆலோசனையை ஆதரித்து வருகின்றனர். அது தான் நெதர்லாந்தில் நிலவும் ஆணாதிக்க தன்மை கொண்ட, இனவாத பெண்ணியத்தின் கண்ணோட்டம். தாம் "சம உரிமை பெற்று விட்டதாக" கருதிக் கொள்ளும் வெள்ளையின பெ

நான் ஸ்ரீலங்கன் இல்லை.... நான் தமிழீழன் இல்லை....

நான் ஸ்ரீலங்கன் இல்லை. நான் தமிழீழன் இல்லை. நான் இந்தியன் இல்லை. நான் பிரித்தானியன் இல்லை. உலகம் இருநூறு தடுப்பு முகாம்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அந்த முகாம்களை தேசம் என்றழைக்கிறார்கள். தடுப்பில் உள்ள மனிதர்களின் நன்னடத்தையை குடியுரிமை என்கிறார்கள். முகாம்களுக்கு இடையில் சென்று வர கடவுச்சீட்டு கொண்டு செல்ல வேண்டும். இதைத் தான் சுதந்திரம் என்று தந்திரமாக மூளையை சலவை செய்கிறார்கள். நான் ஸ்ரீலங்கன் இல்லை. நான் தமிழீழன் இல்லை. - கலையரசன் 16-05-2020