முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வட கொரிய அதிபருக்கு சமாதானத்திற்கான சர்வதேச விருது!


வட கொரிய எதிர்ப்பாளர்களுக்கு சில  அதிர்ச்சியான தகவல்கள்:

1. இந்தோனேசியாவின் பெரும் மதிப்புக்குரிய "சுகார்னோ கல்வி நிலையம்", வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இற்கு, சமாதானத்திற்கான விருது வழங்கி கௌரவித்துள்ளது. 

ஏற்கனவே இந்த நிலையம், அதே விருதை மகாத்மா காந்திக்கு வழங்கி இருந்தது. இந்த விருது தொடர்பாக, மேற்கத்திய நாடுகளில் கடுமையாக விமர்சிக்கப் பட்ட போதிலும், இந்தோனேசிய அரசு அதனை நியாயப் படுத்தி பேசி வருகின்றது. தமிழ் பேசும் ஏகாதிபத்திய அடிவருடிகளும், இந்தத் தகவலை கேள்விப்பட்டு "அறச் சீற்றத்தை" வெளிப்படுத்தலாம். 

வட கொரியா என்றவுடன், வரிந்து கட்டிக் கொண்டு எதிர்க்கும் போலி ஜனநாயக கோமாளிகள், ஒபாமாவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுத்த நேரம் வாயே திறக்கவில்லை. ஒரு சிறு முணுமுணுப்பை கூட எதிர்ப்பாக தெரிவிக்காமல், ஏழு உலக நாடுகள் மீது படையெடுத்து, பல இலட்சம் மக்களை கொன்று குவித்த ஒபாமாவுக்கு பரிசு கொடுத்ததை ஆமோதித்தார்கள். இது தான் வட கொரிய எதிர்ப்பாளர்களின் இரட்டை வேடம். 

2. "வட கொரியர்கள் திருமணத்திற்கு முன்னர் உடலுறவு வைத்துக் கொள்வதில்லை. அது இன்றைக்கும் ஒரு பழமைவாத கலாச்சாரத்தை பின்பற்றும் நாடு." இவ்வாறு, வட கொரியா கிம் இல் சுங் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க சென்ற, பெல்ஜிய மாணவர் அலெசான்ட்ரோ, பிபிசி பேட்டியில் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு முன்னரான‌ உடலுறவுக்கு அனுமதிக்காத, "மனித உரிமை மீறலுக்கு" எதிராக, நமது வலதுசாரிகள் தமது "அறச் சீற்றத்தை" வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன். "மன்னராட்சி ஒழிக!" "சர்வாதிகாரம் ஒழிக!" 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்...

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல் ...

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்...