முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் லெனினின் பங்களிப்பு


இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு லெனின் உதவிய வரலாறு தெரியாத தற்குறிகளான பாரதீய நாஜிக் கட்சியினர் கவனத்திற்கு:

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடிய, எம்.என்.ராயின் கம்யூனிச புரட்சிப் படை பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் அளவிற்கு அது ஊடகங்களினால் பேசப் படாமை ஒரு காரணமாக இருக்கலாம்.

வங்காளி புரட்சிவீரர் எம்.என்.ராய், பிரிட்டிஷாருக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய காரணத்தால் தேடப் பட்டு வந்தார். அவர் மெக்சிகோ சென்று, மொமிண்டேர்ன் பிரதிநிதியை சந்தித்தார். அன்றிலிருந்து மார்க்சிஸ்டாக மாறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தத்தில் மட்டுமல்லாது, மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியதில் அவரது பங்களிப்பும் இருந்துள்ளது.

போல்ஷெவிக் புரட்சியின் தலைவர் லெனினை சந்திந்த முதலாவது இந்தியர் எம்.என்.ராய் தான். லெனினின் நன்மதிப்புக்கு உரியவராக இருந்த படியால், இந்தியப் புரட்சிக்கு ஆதரவை பெற்றுக் கொண்டார். லெனினின் பணிப்பின் பேரில், மத்திய ஆசியாவில், தாஷ்கென்ட் நகரில், இந்திய விடுதலைப் படை உருவாக்கப் பட்டது.

எம்.என். ராயின் புரட்சிப் படையில் பெருமளவு முஸ்லிம் வீரர்களும் சேர்ந்திருந்தனர். முதலாம் உலகப்போரில் துருக்கி தனது பகுதிகளை பிரிட்டனிடம் இழந்தது. அப்போது துருக்கி இராணுவத்திற்கு உதவுவதற்காக, இந்திய முஸ்லிம் தொண்டர்கள் சென்று கொண்டிருந்தனர்.

சுமார் எழுபது முஸ்லிம்கள் (பெரும்பாலும் இன்றைய பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்) எல்லை தாண்டும் நேரம், தற்செயலாக சோவியத் யூனியனுக்குள் சென்று விட்டனர். சோவியத் செம்படையினர் அவர்களை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர். எம்.என். ராய் அவர்களை பொறுப்பெடுத்து இந்திய புரட்சிப் படையில் இணைத்துக் கொண்டார்.

நிச்சயமாக எல்லோரும் கம்யூனிஸ்டுகளாக மாறப் போவதில்லை. குறைந்தது இருபது பேராவது இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் இருந்து மீள முடியாமல் இருந்தனர். அவர்களைத் தவிர ஏனையோர் கம்யூனிசக் கொள்கையால் ஈர்க்கப் பட்டு, எம்.என்.ராயின் படையில் சேர ஒத்துக் கொண்டனர். இந்திய கம்யூனிச இராணுவம் பெரியளவு தாக்கத்தை உண்டாக்கா விட்டாலும், லெனின் பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு உதவியது.

போல்ஷேவிக் புரட்சி நடந்த அதே காலகட்டத்தில், ஆங்கிலேயர்கள் மத்திய ஆசியாவை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்று தோல்வியைத் தழுவினார்கள். அதன் தொடர்ச்சி தான் ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்புப் போர்களும். கடைசியில் பிரட்டனும், சோவியத் யூனியனும், ஆப்கானிஸ்தானை நடுநிலை நாடாக ஏற்றுக் கொண்டன.

எழுபதுகளில் நடந்த ஆப்கான் போரில் ஜிகாதிப் படையினரை, பாகிஸ்தானியர்கள் ஆதரித்த விடயம் அனைவருக்கும் தெரியும். எதற்காக ஆதரித்தீர்கள் என்று பாகிஸ்தானிய நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இது: "பாகிஸ்தானிலும் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. நிறைய கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். சோவியத் படைகள் ஆப்கானிஸ்தான் வரை வந்து விட்டது. அடுத்ததாக பாகிஸ்தானும் கம்யூனிச நாடாகி விட்டிருக்கும். நாங்கள் அதை தடுத்து நிறுத்திவிட்டோம்!"

இன்றைக்கும் பலர் அப்பாவித்தனமாக நினைப்பது மாதிரி, பாகிஸ்தான் பிரிவினைக்கு இந்து - முஸ்லிம் முரண்பாடு காரணம் அல்ல. இந்தியாவும் ஒரு கம்யூனிச நாடாவதை தடுத்து நிறுத்துவது தான் உண்மையான நோக்கம். பாகிஸ்தானை பிரிக்காது விட்டிருந்தால், இந்தியா ஆப்கானிஸ்தானாக மாறி விட்டிருக்கும்.

- கலையரசன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்...

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல் ...

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்...