முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புலி ஆதரவாளர் வேஷம் போடும் தமிழ்த் தேசிய வலதுசாரிகள்


தமிழீழம் கிடைத்திருந்தால், அதற்காக தமது உயிரை அர்ப்பணித்து போராடிய போராளிகளுக்கு தான், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். 

அதற்காக தனியான ஒதுக்கீடு கொண்டு வரப் பட வேண்டும். போராடப் போகாமல் சொகுசாக வாழ்ந்து, பல்கலைக்கழகம் வரை படித்து முடித்தவரைத் தான், வேலைகளுக்கான நேர்முகப் பரீட்சையில் தேர்ந்தெடுக்கக் கூடாது. 

தனி நாடு கிடைத்த பின்னர் போராளிக்கு வேலை கிடைக்காது என்றால், பிறகென்ன ...... அவன் போராட வேண்டும்? தனி நாடு கிடைத்த பயனை, போராடாமல் சொகுசாக வாழ்ந்த ஒருவன் அனுபவிக்கிறான் என்றால், அந்த தனி நாடு எதற்கு? அது யாருக்கான விடுதலை?

ஈழத்தில் "புலி ஆதரவாளர்" வேஷம் போடும், வலதுசாரிகளின் சுயரூபத்தை அறிந்து கொள்ள ஒரு வழியுள்ளது.

புலிகளின் ஆட்சிக் காலத்தில், "தமிழர் ஒற்றுமையை குலைக்கும் சாதி வெறியர்கள்", "தமிழர்களை சுரண்டும் முதலாளிகள்" ஆகியோரை, சமூகவிரோதிகளாக அறிவித்து, மரண தண்டனை விதித்திருக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். அந்த நிமிடத்தில் இருந்து, அவர்கள் புலி எதிர்ப்பாளராக மாறி விடுவார்கள். திடீரென புலிகளின் மனித உரிமை மீறல்கள் பற்றி எமக்கு வகுப்பெடுப்பார்கள்.

வறுமையின் நிமித்தம் பாலியல் தொழில் செய்த அபலைப் பெண்ணுக்கு, புலிகள் மரண தண்டனை வழங்கியதை ஆதரித்தார்கள். ஆனால், பல தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை வன்புணர்ச்சி செய்த சாதி வெறியர்களை "மன்னித்து" விட்டு விடச் சொல்கிறார்கள்.

வறுமை காரணமாக மாடு திருடியவனுக்கு மரண தண்டனை வழங்கியதை ஆதரித்தார்கள். அதே நேரம், கோடி கோடியாக கொள்ளையடித்த முதலாளிகளையும், நிலவுடைமையாளர்களையும் கண்டுகொள்ளாமல் விடச் சொல்கிறார்கள்.

ஈழத்து அரசியல் களத்தில், ஆணாதிக்கம், சாதிய மேலாதிக்கம், முதலாளித்துவ சுரண்டல் என்பன, தமிழ் தேசியத்தின் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளன. அதற்குக் காரணமான சமூக விரோத சக்திகள், புலிகளின் பாணியில் களையெடுக்கப் படாத வரையில், தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு அடி கூட முன்னோக்கி நகர முடியாது.

புதுசு புதுசாக தமிழ் (தேசிய) இணையத் தளங்கள் முளைத்துக் கொண்டிருந்த காலமது. அப்போது என்னை சந்தித்த புலம்பெயர்ந்த புலிகளின் செயற்பாட்டாளர் ஒருவர் கேட்டார்: "அண்ணே, நீங்களும் ஒரு இணையத்தளம் நடத்துங்கோ... அதற்கான செலவுகளை நாங்கள் தாறம்..."

அவர் அடுத்து சொன்ன "நிபந்தனை" தான், தமிழ் இணையத்தளங்களின் சுயத்தை வெளிப்படுத்தியது. "செய்திகளை சேகரிப்பதற்கு சிரமப் படத் தேவையில்லை... பதிவு, புதினம் அல்லது தமிழ்நெட் போன்ற இணையத்தளங்களில் வரும் தகவல்களை, அப்படியே கொப்பி பேஸ்ட் செய்து போட்டால் போதும்!"

ஒரு தடவை, "புலம்பெயர்ந்த புலிகளின் பிரதிநிதி" என்று கூறிக் கொண்டு, அதிர்வு என்ற இணையத்தளம் நடத்தும் கண்ணன், எனது சி.ஐ.ஏ. பற்றிய கட்டுரை ஒன்றை தானே எழுதியதாக எடுத்துப் போட்டிருக்கிறார். அதைப் பல நண்பர்கள் சுட்டிக் காட்டினார்கள். அதைப் பார்த்த பொழுது,எனக்கு அந்த ஞாபகம் தான் வந்தது.

சொந்தச் சரக்கு எதுவுமில்லாத "புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகள்", கொள்கை, கோட்பாடுகளை இடதுசாரிகளிடம் கடன் வாங்குவது அடிக்கடி நடக்கும் விடயம். ஏற்கனவே, "சுயநிர்ணயம், ஏகாதிபத்தியம், பேரினவாதம், அரச பயங்கரவாதம்" போன்ற பல அரசியல் கலைச் சொற்களை, அவர்கள் இடதுசாரிகளிடம் இருந்து தான் கற்றுக் கொண்டார்கள். அதை வெளிப்படையாக சொல்வதற்கு என்ன தயக்கம்? நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்...

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல் ...

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்...