முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இனப்படுகொலையும் மேற்கத்திய சட்டங்களும்


"ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை, உலக நாட்டு மக்கள் அத்தனை பேரும் கண்டிக்க வேண்டும்" என்று எதிர்பார்க்கும் தமிழ் இன உணர்வாளர்கள், அதனை மேற்கத்திய சட்டங்களுக்கு உட்பட்டு நடைமுறைக்கு கொண்டு வர முடியாது. அவர்கள் முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

மேற்கத்திய முதலாளித்துவ நலன் சார்ந்த சட்டம் எதுவும், இனப்படுகொலைகளை தடுப்பதற்காக எழுதப் பட்டதல்ல. மிகவும் பிரபலமான, நியூரன்பேர்க் நீதிமன்றம் கூட, மிகவும் குறைந்தளவு நாஸி குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை வழங்கியது. யூத இனப்படுகொலையில் ஈடுபட்ட பெரும்பான்மையான நாஸிகள், அமெரிக்காவிலும், பிற மேலைத்தேய நாடுகளிலும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று? சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பினார்கள் என்று சாமானியர்களின் மொழியில் கூறலாம்.

உண்மையில், மேற்கத்திய சட்டம் எப்போதும் ஆதாரங்களை வைத்துக் கொண்டு தான் தண்டனை வழங்கும். ஆதாரம், சாட்சிகள் இல்லாவிட்டால், எந்தக் குற்றவாளியும் தப்பி விடலாம். இதனால், சோஷலிச நாடாக இருந்த கிழக்கு ஜெர்மனியில் ஒரு புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்கள். ஒருவர் தனது "மனச் சாட்சிக்கு விரோதமாக நடந்தாலும் குற்றம் தான்" என்ற சட்டம், விசேடமாக நாஸிஸ ஒழிப்பிற்காக இயற்றப் பட்டது. "சுடச் சொல்லி உத்தரவு வந்ததால் சுட்டேன்... என்னிடம் நிறைவேற்று அதிகாரம் இருக்கவில்லை... எனது கடமையை மட்டும் செய்தேன்..." யாரும் இவ்வாறு சொல்லித் தப்ப முடியாது. அதாவது, மனச் சாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்வதும் குற்றமாகும்.

மேற்கு ஜெர்மனியை விட, கிழக்கு ஜெர்மனியில் தான் இனப்படுகொலை குற்றச்சாட்டில் பெருமளவு நாஸிகள் தண்டிக்கப் பட்டனர். நாசிசம் முற்றாக அழித்தொழிக்கப் பட்டது. ஆனால், மேற்கு ஜெர்மனியில்? முன்னாள் நாஸிகள் பலர் சுதந்திரமாகத் திரிந்தனர். அரசாங்கத்தில் மட்டுமல்லாது, நிறுவனங்கள், கல்விச்சாலைகள் எல்லா இடங்களிலும் இனப்படுகொலை குற்றவாளிகளான முன்னாள் நாஸிகள் தொடர்ந்தும் பதவிகளில் அமர்ந்திருந்தார்கள். கிழக்கு ஜெர்மனியில் நாஸிகளுடன் தொடர்புடைய கொள்கைகள் அனைத்தும், சட்டம் போட்டு தடை செய்யப் பட்ட பின்னர் தான் மேற்கு ஜெர்மனியும் தன் பங்கிற்கு சில மாற்றங்களை கொண்டு வந்தது.

மேற்கு, கிழக்கு ஜெர்மனிகள் இரண்டிலும், "யூத இனப்படுகொலை நடக்கவில்லை என்று மறுப்பது" ஒரு தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இன்றைக்கும் ஒன்றிணைந்த அந்த சட்டம் அமுலில் உள்ளது. அதனால் தான் அங்கே ஜெர்மன் தேசியவாத சக்திகள், அரசியலில் மிகவும் பலவீனமாக உள்ளன.

- கலையரசன்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்...

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல் ...

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்...