முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சோஷலிச கிழக்கு ஜெர்மனி பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்



முன்னாள் கம்யூனிச கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த நண்பர் ஒருவர், எனக்கு கணனியின் பாகங்களை பகுதி பகுதியாக பிரித்துப் போட்டு, பின்னர் பொருத்தி முழுமையான கணணியாக்குவது எப்படி என்று காட்டித் தந்தார். பெர்லின் மதில் விழும் பொழுது, அவருக்கு பத்து வயதாக இருந்திருக்கலாம். அந்த நண்பர், தனது செயலை ஒரு உதாரணம் மூலம் புரிய வைத்தார்.

ஒரு முதலாளித்துவவாதி, பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை சாப்பிடக் கொடுத்து விட்டு, பின்னர் அவன் கஷ்டப் பட்டு வேலை செய்து, மீன் வாங்கிச் சாப்பிட வேண்டுமென்று எதிர்பார்ப்பான். அதே நேரம், ஒரு பொதுவுடமைவாதி பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதுடன், அவனாகவே மீன் பிடித்து உண்பது எப்படி என்றும் காட்டிக் கொடுப்பான்.

மக்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்காமல், அறியாமையில் வைத்திருந்தால் தான், முதலாளி கோடி கோடியாக இலாபம் சம்பாதிக்க முடியும். "நமது தமிழ் மக்களுக்கு கம்யூனிசம் தேவையில்லை. இன்று யாருமே அதை பொருட் படுத்துவதில்லை. மக்கள் இடதுசாரிகளை வெறுக்கிறார்கள்..." என்றெல்லாம் மெத்தப் படித்த அறிவாளிகள் கூட உளறித் திரிகின்றார்கள்.

அவர்கள் மனதில் குடி கொண்டிருக்கும் அச்சம் தான், இந்த உளறலுக்கு காரணம். அவர்களிடம் மட்டுமே தேங்கிக் கிடக்கும் அறிவியல், அனைத்து மக்களையும் போய்ச் சேர்ந்து விட்டால், யார் அவர்களை மதிப்பார்கள்? அதற்குப் பின், கை நிறைய சம்பளம் வாங்கி, வாய் நிறைய உண்ண முடியுமா?

எதற்காக பெரும்பாலான நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள், கம்யூனிசத்தை வெறுக்கிறார்கள் என்பதற்கு, இதை விட வேறு உதாரணம் வேண்டுமா? ஐயோ பாவம். அவர்கள் தாங்கள் மட்டுமே உலகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
******

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முன்னணியில் திகழ்ந்த கிழக்கு ஜெர்மனி.

இன்று உலகம் முழுவதும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு உருவாகி வருகின்றது. பாவித்து வீசிய பொருட்களை மீள்பாவனை செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் கவனம் செலுத்துகின்றன.

ஆனால், முப்பது வருடங்களுக்கு முன்னரே, சோஷலிச கிழக்கு ஜெர்மனி சிறப்பாக நடைமுறைப் படுத்தி வந்தது. நாடு முழுவதும் மீள்பாவனைக்கான சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் இயங்கின. பாவித்து வீசப்படும் போத்தல்கள், தகரங்கள், கடதாசிகள் எல்லாவற்றையும் சேகரித்துக் கொடுப்போருக்கு சிறு தொகை சன்மானம் கொடுக்கப் பட்டது. ஜெர்மன் ஒன்றிணைவுக்குப் பின்னர், அந்தத் தொழிற்சாலைகள் யாவும் மூடப்பட்டு விட்டன. ஏனென்றால், பொருட்களை மீள் பாவனைக்கு பயன்படுத்துவது "சோஷலிசம்" ஆகும்!
******

ஒரு மேற்கு ஜெர்மன் பிரஜையின் வாக்குமூலம்: 
- எந்தக் காலத்திலும் உணவுத்தட்டுப்பாடு இருக்கவில்லை. யாரும் பட்டினியால் சாகவில்லை. வாழைப்பழம், விஸ்கி, கொக்கோ கோலா போன்ற வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. 
- பாண் (Bread), உருளைக் கிழங்கு, பொதுப் போக்குவரத்து கிட்டத்தட்ட "இலவசமாக" கிடைத்தது. (விலை மிக மிகக் குறைவு). வீட்டு வாடகையும் மிக மிகக் குறைவு. 
- தொட்டில் முதல் சுடுகாடு வரை, தனி மனிதனின் அனைத்து தேவைகளையும் அரசே நிறைவேற்றியது. விளையாட்டு, விடுமுறை, ஓய்வுநேர கேளிக்கைகளை அரசே ஒழுங்கு படுத்தியது. 
- தெருவில் ஊதாரியாக திரியும் இளைஞர்களை காண முடியாது. கிரிமினல் குற்றங்கள் பற்றி யாருமே கேள்விப்படுவதில்லை. 
- உங்களுக்கு உதவி செய்வதற்கு எந்நேரமும் யாராவது ஒருவர் இருந்தார். மக்களுக்கிடையில் ஒற்றுமையும், பரஸ்பர உதவி செய்யும் மனப்பான்மையும் இருந்தது. அதற்கு மாறாக, மேற்கு ஜெர்மனியில் எல்லோருமே சுயநலவாதிகளாக இருந்தார்கள்.

கிழக்கு ஜெர்மன் மக்கள், இப்போதும் சோஷலிச கடந்த காலம், "ஒரு பொற்காலம்" என்று நினைவுகூருகின்றனர். அண்மையில் எடுத்த கருத்துக் கணிப்பொன்றின் படி, 40% பேர், முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் வாழ்க்கை சிறப்பாக இருந்தது என்று கூறுகின்றனர். பெர்லின் மதில் அப்படியே இருந்திருந்தால் எவ்வளவு நல்லது என்று ஏங்கும் பலரை, நீங்கள் இன்றைக்கும் கிழக்கு ஜெர்மனியில் காணலாம். இந்தத் தகவலை இத்தாலி இணையத் தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

Germania, Ostalgie più forte che mai. Viaggio tra chi rivuole la Ddr

- Kalaiyarasan

The truth about the GDR
https://www.youtube.com/watch?v=KTIC73lVZz8

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்...

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல் ...

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்...