முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெர்லின் ம‌தில் ம‌றைய‌வில்லை! இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இப்போதும் உண்டு!!


சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னி இருந்த கால‌த்தில் பெர்லின் ம‌திலை "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில்" என்று அழைத்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ர்க‌ள் அதை நையாண்டி செய்து‌ "க‌ம்யூனிச‌ பிர‌ச்சார‌ம்" என்று புற‌க்க‌ணித்த‌ன‌ர். இப்போது கிழ‌க்கு ஜேர்ம‌ன் ம‌க்க‌ள் தாமாக‌வே "பாசிச‌ எதிர்ப்பு ம‌தில் இருந்த‌து ந‌ல்ல‌த‌ற்கே!" என்று கூறுகிறார்க‌ள்.

"நாங்க‌ள் பாசிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ளின் தாய‌க‌ம் ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதையிட்டு பெருமைப் ப‌ட‌ வேண்டும்." என்று சொல்லிக் கொள்கிறார்க‌ள். (இத‌ற்கு மாறாக‌, மேற்கு ஜேர்ம‌னியில் நாஸிச‌ க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ வெட்க‌ உண‌ர்வு இருக்கிற‌தே அல்லாம‌ல், பாசிச‌ எதிர்ப்புண‌ர்வு இருக்க‌வில்லை.)

அங்கு இப்போதும் இர‌ண்டு ஜேர்ம‌னிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? முன்னாள் கிழ‌க்கு ஜேர்ம‌னியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளுக்கு ம‌திப்பில்லை. அர‌ச‌, த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌த‌வி வ‌கிப்போரில் பெரும்பான்மையின‌ர் மேற்கு ஜேர்ம‌னியில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். அத‌னால் வேல‌யில்லாப் பிர‌ச்சினை அதிக‌ம். ஜேர்மனியின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்று கூட‌ கிழ‌க்கு ஜேர்ம‌னியில் த‌லைமைய‌க‌த்தை கொண்டிருக்க‌வில்லை.

ஜேர்ம‌ன் அதிப‌ர் அன்கெலா மெர்க‌ல் கிழ‌க்கு ஜேர்ம‌னியை சேர்ந்த‌வ‌ர். ஆனால், அங்கே அவ‌ருக்கு ம‌திப்பில்லை. கிழ‌க்கு ஜேர்மனிய‌ருக்கு அவ‌ர் ஒரு துரோகி! பொருளாதார‌ப் பிர‌ச்சினைக‌ள், ச‌மூக‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ள் கார‌ணமாக‌ தீவிர‌வாத‌க் க‌ட்சிக‌ளுக்கான‌ ஆத‌ர‌வு அதிக‌ரிக்கின்ற‌து. இஸ்லாமிய‌ வெறுப்பை காட்டும் PEGIDA, அத‌னுட‌ன் சேர்ந்து வெளிநாட்ட‌வ‌ர் எதிர்ப்பு அர‌சிய‌ல் ந‌ட‌த்தும் AfD ஆகிய‌ தீவிர‌வ‌ல‌துசாரி க‌ட்சிக‌ளுக்கான‌ ஆத‌ர‌வு கிழ‌க்கு ஜேர்ம‌னியில் அதிக‌ம்.

"ஜேர்ம‌னியில் வெளிநாட்ட‌வ‌ர் எண்ணிக்கை, பூர்வீக‌ ஜேர்ம‌னிய‌ரை விட‌ அதிக‌ம்" என்ப‌ன‌ போன்ற‌ த‌வ‌றான‌ ந‌ம்பிக்கைக‌ளும் காண‌ப் ப‌டுகின்ற‌ன‌. (முத‌லாளித்துவ‌த்தை புரிந்து கொள்ளாம‌ல், "வெளிநாட்ட‌வ‌ரை வெளியேற்றினால் வேலை வாய்ப்புக‌ள் கிடைக்கும்" என்று அப்பாவித்த‌ன‌மாக‌ ந‌ம்புகிறார்க‌ள்.) இத்த‌னைக்கும் கிழ‌க்கு ஜேர்மனியில் வெளிநாட்ட‌வ‌ர் எண்ணிக்கை மிக‌ மிக‌க் குறைவு.

அத‌ற்காக‌ தீவிர‌ வ‌ல‌துசாரி ச‌க்திக‌ளை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் எல்லோரும் இன‌வாதிக‌ள் என்று முத்திரை குத்துவ‌து த‌வ‌று. அங்கே முக்கியமான‌ பிர‌ச்சினை பொருளாதார‌ பின்ன‌டைவே த‌விர‌ இன‌வாத‌ம் அல்ல‌. அர‌சுக்கு அழுத்த‌ம் கொடுத்து த‌ங்க‌ள‌து குறைக‌ளை கேட்க‌ வைப்ப‌து தான், தீவிர‌ வ‌ல‌துசாரிக் க‌ட்சிக‌ளுக்கு ஓட்டுப் போடும் ம‌க்க‌ளின் நோக்க‌மாக‌ உள்ள‌து. இருப்பினும், இந்த‌ வாய்ப்பை இன‌வாத‌க் க‌ட்சிக‌ள் த‌ம‌க்கு சாத‌க‌மாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்கின்ற‌ன‌.

தீவிர‌ இட‌துசாரிக் க‌ட்சியான‌ Die Linke க்கும் ஆத‌ர‌வு அதிக‌ரித்து வ‌ருகின்ற‌து. அது முன்னாள் கிழ‌க்கு ஜேர்மனியை ஆண்ட‌ க‌ம்யூனிச‌ SED க‌ட்சியின் தொட‌ர்ச்சியாக‌ இருந்து வ‌ருகின்ற‌து. ஜேர்ம‌ன் ஒன்றிணைவின் போது, கிழ‌க்கு ஜேர்ம‌னிய‌ர்க‌ள் ந‌ட‌த்திய‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் பொருளாதார‌ மேம்பாட்டுக்காக‌ இருந்த‌து. அவை மேற்க‌த்திய‌ பாணி ஜ‌ன‌நாய‌கம் கோரி ந‌ட‌ந்த‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் அல்ல‌.

பிற்குறிப்பு: The New York Times, (14 feb 2018) ப‌த்திரிகையில் பிர‌சுர‌மான‌து. நான் சில‌ இட‌ங்க‌ளில் விரிவான‌ விள‌க்க‌ம் கொடுத்திருக்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்...

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல் ...

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்...