முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிரியாவில் என்ன‌ ந‌ட‌க்கிற‌து?


எதிரும் புதிருமாக‌ காண‌ப்ப‌டும் முத‌லாளிய‌- த‌மிழ் வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளும், சுன்னி- இஸ்லாமிய‌ அடிப்படைவாதிக‌ளும், வ‌ல‌துசாரி த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளும் ஓர‌ணியில் நின்று சிரியாவுக்காக‌ அழுகிறார்க‌ள் என்றால், பின்ன‌ணியில் ஏதோ ஒரு அர‌சிய‌ல் ச‌க்தி அவ‌ர்க‌ளை ஒன்றிணைக்கிற‌து என்று அர்த்த‌ம்.

ஒரு மாத‌த்திற்கு முன்ன‌ர் வ‌ட‌ மேற்கு சிரியாவில் உள்ள‌ அப்ரின் பிர‌தேச‌ம் துருக்கி ப‌டையின‌ரால் தாக்க‌ப் ப‌ட்ட‌து. அப்போதும் பொது ம‌க்க‌ளின் உயிரிழ‌ப்புக‌ள், சொத்த‌ழிவுக‌ள் அதிக‌மாக‌ இருந்த‌ன‌. விமான‌க் குண்டுத் தாக்குத‌லில் ப‌லியான‌ குழந்தைக‌ளின் ப‌ட‌ங்க‌ள் வெளியாகின‌. அது குறித்து ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் எந்த‌ எதிர்வினையும் எழ‌வில்லை. எங்கும் க‌ள்ள‌ மௌன‌ம் நில‌விய‌து.

அப்ரின் பிர‌தேச‌த்தில் ப‌லியான‌ ம‌க்க‌ளின் அவ‌ல‌க் குர‌ல் வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளின் காதுக‌ளை எட்ட‌வில்லை. அங்கு கொல்ல‌ப் ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளுக்காக‌ யாரும் அழ‌வில்லை. அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளை யாரும் பார்க்க‌வில்லை. ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் செய‌ற்ப‌டும் ஒருவ‌ர் கூட‌ கொந்த‌ளிக்க‌வில்லை. ஏன்? ஏன்? ஏன்?

குர்திய‌ர்க‌ளும் சுன்னி முஸ்லிம்க‌ள் தானே? அது த‌மிழ் பேசும் சுன்னி முஸ்லிம் ம‌த‌வாதிக‌ளின் உண‌ர்வுக‌ளை த‌ட்டி எழுப்பாத‌து ஏன்? சிரியாவில் குர்திய‌ரும் த‌னி நாடு கேட்டு போராடிய‌ தேசிய‌ விடுத‌லை இய‌க்க‌த்த‌வ‌ர் தானே? அது த‌மிழீழ‌த்தை த‌லையில் வைத்திருக்கும் த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளின் க‌ண்க‌ளை உறுத்தாது ஏனோ? அப்போது ம‌ட்டும் க‌ண்க‌ளையும், காதுக‌ளையும் மூடிக் கொண்டிருந்த‌து ஏனோ?

என‌க்கு இந்த‌ லாஜிக் என்ன‌வென்று புரிய‌வில்லை. உல‌க நாடுக‌ளை விட்டு விடுவோம். சிரியாவில் ந‌ட‌க்கும் சிக்க‌லான‌ யுத்த‌த்தில் எந்த‌ப் ப‌க்க‌த்தில் ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்டாலும் க‌ண்டிப்ப‌தை விட்டு விட்டு, குறிப்பிட்ட‌ சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ம‌ட்டும் தேர்ந்தெடுத்து அழுவ‌து ஏனோ?

ட‌மாஸ்க‌ஸ் ந‌கருக்கு அருகில் உள்ள‌ கூத்தா பிர‌தேச‌ம், கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌து. அங்குள்ள‌ FSA போன்ற‌ அமைப்புக‌ள் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற‌ மேற்குல‌க‌ நாடுக‌ளின் நிதியில் இய‌ங்குவ‌தால், அவ‌ர்க‌ள் வெளியிடும் த‌க‌வ‌ல்க‌ளும் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் முக்கிய‌த்துவ‌ம் பெறுகின்ற‌ன‌. அத‌னால், போரில் வெல்ல முடியா விட்டாலும் பிர‌ச்சார‌ப் போரில் வெல்ல‌ வேண்டும் என்ற‌ வெறியுட‌ன் செய‌ற்ப‌டுகின்ற‌ன‌.

க‌ட‌ந்த‌ ஐந்தாண்டு கால‌மாக‌ ந‌ட‌க்கும் சிரியா போரில் அடிக்க‌டி காணும் காட்சிக‌ள் இவை. அர‌சும், கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளும் மாறி மாறி பிர‌ச்சார‌ம் செய்வ‌து வ‌ழ‌மை. ஒருவ‌ர் மாறி ஒருவ‌ர் போர்க்குற்ற‌ச்சாட்டு, இன‌ப்படுகொலைக் குற்ற‌ச்சாட்டு சும‌த்தி, த‌ம‌க்கு சார்பான‌வ‌ர்க‌ளின் அனுதாப‌த்தை பெற்றுக் கொள்ள‌ விரும்புகின்ற‌ன‌ர்.

இத‌னால் க‌ளைப்ப‌டைந்த‌ மேற்கைரோப்பிய‌ ஊட‌க‌ங்க‌ள், த‌ற்போது ந‌ட‌க்கும் கூத்தா யுத்த‌ம் தொட‌ர்பான‌ த‌க‌வ‌ல்க‌ளுக்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தில்லை. அன்றாட‌ம் செய்தி தெரிவிக்கும் போதும், "கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளின் பிர‌ச்சார‌ மைய‌த்தால் வெளியிட‌ப் ப‌ட்ட‌ உறுதிப் ப‌டுத்த‌ப் ப‌டாத‌ த‌க‌வ‌ல்க‌ள்" என்று சேர்த்தே சொல்கின்ற‌ன‌.

சிரியா இராணுவ‌ம் ஒன்றும் சிற‌ந்த‌து அல்ல‌. அர‌ச‌ ப‌டைக‌ளின் க‌ண்மூடித்த‌ன‌மான‌ எறிக‌ணைத் தாக்குத‌ல்க‌ளில் ஏராள‌ம் பொது ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். அவை போர்க்குற்ற‌ங்க‌ளுக்குள் அட‌ங்கும் என்பதில் ம‌றுப்பில்லை. இருப்பினும், கிள‌ர்ச்சியாள‌ர்க‌ளும் புனித‌ர்க‌ள் அல்ல‌. ஐ.எஸ். வான‌த்தில் இருந்து குதிக்க‌வில்லை. FSA க்கும் ISIS க்கும் இடையில் பெரிதாக‌ வித்தியாச‌ம் இல்லை.

ஐ.எஸ்.க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ ராக்கா மீதான‌ போரின் போதும், ஏராள‌மான‌ பொது ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். குழ‌ந்தைக‌ளும் ப‌லியாகின‌. ஐ.எஸ். அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளைக் காட்டி பிர‌ச்சார‌ம் செய்து அனுதாப‌ம் தேடிய‌து. "உல‌க‌மே பார்த்துக் கொண்டிருக்க எம்மின‌ ம‌க்க‌ளை இன‌ப்ப‌டுகொலை செய்கிறார்க‌ள்" என்று ஓல‌மிட்ட‌ன‌ர். கொத்துக் குண்டுக‌ள் வீச‌ப் ப‌ட்ட‌தாக‌வும், இது குறித்து ஜெனீவா சென்று ஐ.நா. வில் முறையிட‌ப் போவ‌தாக‌வும் சொன்னார்க‌ள்.

அப்போது "ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர் ந‌ட‌க்கிற‌து" என்று கைத‌ட்டி வ‌ர‌வேற்ற‌வ‌ர்க‌ள் தான் இன்று "குழ‌ந்தைக‌ளுக்கு எதிரான‌ போர் ந‌ட‌க்கிற‌து" என்கிறார்க‌ள். இவ‌ர்க‌ள் எப்போது யாரை ஆத‌ரிப்பார்க‌ள், யாரை எதிர்ப்பார்க‌ள், யாரின் காலை வாரி விடுவார்க‌ள் என்று தெரியாம‌ல் உள்ள‌து. ஒரு கால‌த்தில் ஐ.எஸ். விடுத‌லைப் போராளிக‌ள் என்றார்க‌ள். பிற‌கு ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் என்று சொல்லி காலை வாரினார்க‌ள்.

ஒன்று ம‌ட்டும் நிச்சய‌ம். நாம் என்ன‌ அர‌சிய‌லைப் பேச‌ வேண்டும் என்ப‌து வாஷிங்ட‌னில் தீர்மானிக்க‌ப் ப‌டுகிற‌து. அங்கிருந்து வ‌ரும் அறிவுறுத்த‌ல்க‌ளை எல்லோரும் பின்ப‌ற்ற‌ வேண்டும். அவ‌ர்க‌ள் எதிர்க்க‌ சொன்னால் எதிர்க்க‌ வேண்டும். ஆத‌ரிக்க‌ சொன்னால் ஆத‌ரிக்க‌ வேண்டும். இந்த‌ விட‌ய‌த்தில் சுன்னி- முஸ்லிம் அடிப்ப‌டைவாதிக‌ளுக்கும், வ‌ல‌துசாரி- த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளுக்கும் இடையில் ந‌ல்ல‌ ஒற்றுமை உள்ள‌து. ச‌ரி, அது உங்க‌ளுக்கிடையிலான‌ இர‌க‌சிய‌மான‌ கொள்கை உட‌ன்பாடு. இத‌ற்குள் எத‌ற்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை இழுக்கிறீர்க‌ள்?

- Kalaiyarasan

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்...

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல் ...

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்...