முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்று குலாக் சிறை முகாம் இன்று பெரும் நகரம்


இது முன்னாள் சோவிய‌த் குடிய‌ர‌சான‌ க‌ச‌க‌ஸ்தான் நாட்டில் உள்ள‌ க‌ர‌க‌ன்டா (Karaganda) ந‌க‌ர‌ம். இது ஸ்டாலின் கால‌த்தில் குலாக் (Gulag) சிறை முகாமாக‌ இருந்த‌து என்றால் ந‌ம்ப‌ முடிகிற‌தா? கிட்ட‌த்த‌ட்ட‌ குவைத் நாடு அள‌வு ப‌ர‌ப்ப‌ள‌வை கொண்ட‌, வெறும் புல்த‌ரை நில‌த்தில் அமைக்க‌ப் ப‌ட்ட‌ குலாக் முகாம்க‌ளில், இல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ "வ‌ர்க்க‌ விரோதிக‌ளை" கொண்டு வ‌ந்து த‌டுத்து வைத்திருந்த‌ன‌ர்.

அவ‌ர்க‌ள் க‌டும் உழைப்பினால் க‌ட்டியெழுப்பிய‌து தான் இந்த‌ப் பிர‌மாண்ட‌மான‌ ந‌க‌ர‌ம். நில‌க்க‌ரி சுர‌ங்க‌ம் பிர‌தான‌மான‌ தொழிற்துறையாக‌ இருந்தது.

ஆர‌ம்ப‌ கால‌த்தில் நிலைமை மோச‌மாக‌த் தான் இருந்த‌து. க‌ட்டாய‌ வேலை, உண‌வுப் ப‌ற்றாக்குறை எல்லாம் இருந்த‌து. ஆனால் அது இர‌ண்டாம் உல‌க‌ப் போர் முடியும் வ‌ரை தான்.

அப்போது குலாக் முகாம்களில் குறிப்பிடத்தக்க அளவு "போர்க் கைதிகளும்" இருந்தனர். உலகப் போரில் "ஜேர்ம‌ன் நாஸிப் ப‌டையெடுப்பாள‌ர்க‌ளை ஆத‌ரித்தார்க‌ள்" என்ற‌ குற்ற‌ச்சாட்டில், சோவிய‌த் மேற்குப் பிர‌தேச‌ங்க‌ளில் இருந்து வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ தேசிய‌ இன‌ங்க‌ளையும் க‌ர‌க‌ண்டாவில் தான் மீள்குடியேற்ற‌ம் செய்திருந்த‌ன‌ர்.

கால‌ப்போக்கில் மெல்ல‌ மெல்ல‌ க‌ர‌க‌ண்டா ந‌க‌ர‌ம் க‌ட்டியெழுப்ப‌ப் ப‌ட்ட‌ பின்ன‌ர், முன்னாள் சிறைக் கைதிக‌ள், அதாவ‌து வ‌ர்க்க‌ எதிரிக‌ளும் ந‌ன்மை அடைந்த‌ன‌ர். பொருளாதார‌ முன்னேற்ற‌ம் கார‌ண‌மாக‌ ப‌ல‌ர் "தாய‌க‌ம் திரும்ப‌ ம‌ன‌மின்றி" அங்கேயே த‌ங்கி விட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ள‌து வ‌ம்சாவ‌ளியின‌ர் க‌ர‌க‌ண்டாவை புதிய‌ தாய‌க‌மாக‌ ஏற்றுக் கொண்டு விட்ட‌ன‌ர்.

ஸ்டாலின் கால‌த்தில், ர‌ஷ்ய‌ர்க‌ள், ஜேர்ம‌னிய‌ர்க‌ள், உக்ரைனிய‌ர்க‌ள், போலிஷ், என்று ப‌ல்வேறு இன‌ங்க‌ளை சேர்ந்த‌ ம‌க்க‌ள் இட‌ம்பெய‌ர்க்க‌ப் ப‌ட்டு க‌ர‌க‌ண்டாவில் மீள்குடியேற்ற‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர். இப்போதும் அங்கே குறைந்த‌து 50 தேசிய‌ இன‌ங்க‌ளை சேர்ந்த‌வ‌ர்க‌ள் வாழ்கிறார்க‌ள். சோவிய‌த் யூனிய‌னின் வீழ்ச்சியின் பின்ன‌ர் பெரும‌ள‌வு ஜேர்ம‌ன் இன‌த்த‌வ‌ர்க‌ள் ஜேர்மனிக்கு புல‌ம்பெய‌ர்ந்து விட்ட‌ன‌ர்.


- கலையரசன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்...

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல் ...

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்...