முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இஷ்காஷிம் - ஒரு நகரம், இரண்டு கதைகள்

ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சிறிய நகரம் இஷ்காஷிம் (Ishkashim). 19 நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், பிரிட்டிஷ், ரஷ்ய வல்லரசுகளுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டி காரணமாக இரண்டாகப் பிரிக்கப் பட்டது. ஒரு ஆற்றுக்கு வடக்கே இருந்த பகுதி ரஷ்யாவுடனும், தெற்கே இருந்த பகுதி ஆப்கானிஸ்தானுடனும் சேர்க்கப் பட்டது.

அதற்குக் காரணம், அன்றைய காலத்தில் காலனிய விஸ்தரிப்பில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் இந்தியாவும், ரஷ்ய சாம்ராஜ்யமும் ஒரே எல்லையில் சந்தித்துக் கொண்டன. இரண்டு சாம்ராஜ்யங்களுக்கும் இடையிலான நீண்ட எல்லைப் பகுதி தனியாக பிரிக்கப் பட்டு, ஆப்கானிஸ்தானுடன் இணைக்கப் பட்டது. இதற்காக அங்கு வாழ்ந்த மக்களின் விருப்பத்தை யாரும் கேட்கவில்லை. ஒரே கிராமங்கள் ஒரே இரவில் இரண்டாகப் பிரிக்கப் பட்டன.

அவ்வாறு பாதிக்கப் பட்ட பகுதி தான் இஷ்காஷிம். தாஜிக்கி மொழியுடன் தொடர்புடைய கிளை மொழி ஒன்றைப் பேசுகின்றனர். கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக, ஒரே நகரத்து மக்கள் இரண்டு வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். ஒரு ஆறு மட்டுமே அவர்களைப் பிரிக்கிறது. ஒரு பாலம் மட்டுமே அவர்களை இணைக்கிறது. வாரத்திற்கு ஒரு தடவை கூடும் சந்தையில், இரு பக்கத்து மக்களும் கலந்து கொள்வார்கள். அவ்வளவு தான். மற்றும் படி வேறெந்த பொதுவான தொடர்புகளும் கிடையாது.

ரஷ்ய சாம்ராஜ்யம் வீழ்ந்து அங்கு ஒரு சோஷலிசப் புரட்சி நடந்தது. அதனால், தாஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த இஷ்காஷிம் நகரம், புதிதாக தோன்றிய சோவியத் யூனியனின் பகுதியானது. அதுவே சோவியத் ஒன்றியத்தின் தெற்கில் உள்ள கடைசி நகரம். ஆகையால், சோஷலிசம் கொண்டு வந்த மாற்றங்கள் அங்கேயும் கிடைக்கும் வகை செய்யப் பட்டது. மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் போன்ற அனைத்து அத்தியாவசிய வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டன.

சோவியத் யூனியன் வீழ்ந்த பின்னர், தாஜிகிஸ்தான் தனியான குடியரசானது. இருப்பினும் சோவியத் காலத்து கட்டுமானம் இப்போதும் அங்கே இயங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். இன்னமும் அங்கே லெனின் சிலை உள்ளது. "தங்கள் வாழ்வில் ஒளியேற்றிய மகான்" என்று உள்ளூர் மக்கள் இப்போதும் லெனினுக்கு மரியாதை செலுத்துகின்றனர். (நம்பாதவர்கள் நேரில் சென்று பார்க்கலாம்.)

இன்றைக்கும் தாஜிக் - இஷ்காஷிம் பிள்ளைகள் சோவியத் காலத்து சீருடையுடன் பள்ளிக்குச் செல்கின்றனர். பள்ளிக்கூடங்கள் ஒழுங்காக நடக்கின்றன. கல்வி கற்க வேண்டிய வயதில் உள்ள மாணவர்கள் ஒழுங்காக பாடசாலைக்கு சமூகமளிக்கின்றனர். தற்போதுள்ள தாஜிகிஸ்தான் ஒரு முதலாளித்துவ நாடு தான். இருப்பினும், கம்யூனிசம் கொண்டு வந்த சமுதாய மாற்றங்கள் அப்படியே உள்ளன. இஸ்லாமியவாதக் குழுக்களை தவிர வேறு யாரும் அதற்கு எதிரானவர்கள் அல்ல.

ஒரு கிலோ மீட்டர் வித்தியாசம் கூட இல்லாத தூரத்தில் உள்ள ஆப்கான்- இஷ்காஷிம் நகரத்தில் இன்னமும் ஒழுங்கான மருத்துவமனையோ, பள்ளிக்கூடமோ கிடையாது. அங்கிருக்கும் ஒன்றிரண்டு பாடசாலைகளில் மாணவர் வருகையும் குறைவு. பல சிறுவர்கள், ஏழ்மை காரணமாக, படிக்க வேண்டிய வயதில் ஆடு மேய்க்கிறார்கள். அங்குள்ள மக்களின் வாழ்க்கை ஒரு நூறாண்டுக்கு முன்னர் இருந்த மாதிரியே இப்போதும் உள்ளது.

கம்யூனிசம் எவ்வளவு "கொடுமையானது" என்று இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள் மக்களே! ஆடு மேய்க்க வேண்டிய சிறுவர்களை பள்ளிக்கூடம் அனுப்பி படிக்க வைக்கலாமா? மதவாதம், இனவாதம், தேசியவாதம் பேசினால் தானே மக்களை மந்தைகளாக வைத்திருக்கலாம்?

- Kalaiyarasan

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்...

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல் ...

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்...