முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்ப் பெண்கள் அணியும் அபாயா ஓர் "இஸ்லாமிய ஆடை" அல்ல!

இன்று வரை பலர் அறியாத உண்மை. இலங்கையில் (இந்து/கிறிஸ்தவ) தமிழ்ப் பெண்களும் "அபாயா" அணிகிறார்கள்! அவர்கள் அதை வேறு பெயரில் அழைத்தாலும், அந்த ஆடையின் வரலாறு ஒன்று தான். 

அபாயா என்பது உண்மையில் ஓர் "இஸ்லாமிய"‌ ஆடை அல்ல‌. ஒரு கால‌த்தில், கிரீஸ் போன்ற‌ ம‌த்திய‌த‌ரைக் க‌ட‌ல் நாடுக‌ளை சேர்ந்த‌ கிறிஸ்த‌வ‌ப் பெண்க‌ளும் அபாயா அணிந்தார்க‌ள். ஏனென்றால் அது அந்த‌ப் பிராந்திய‌ ம‌க்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ உடை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் கிரேக்கப் பெண்கள் அபாயா அணிந்தனர். முகத்தை மூடும் பழக்கம் கூட அவர்களிடம் இருந்தது. 

போர்த்துக்கல் நீண்ட காலமாக இஸ்லாமிய மூர்களின் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதனால் அரேபியக் கலாச்சாரத்தின் பல கூறுகள், போர்த்துக்கல் மக்களால் இன்று வரை பின்பற்றப் பட்டு வருகின்றன. போர்த்துகீசிய மொழியில் அபாயாவை "கவுன்" என்று அழைத்தனர். 

பதினாறாம் நூற்றாண்டில் இலங்கையை காலனிப் படுத்திய போர்த்துக்கேயர்கள், அபாயாவை கவுன் என்ற பெயரில் அறிமுகப் படுத்தினார்கள். அதை இன்றைக்கும் இந்து(மற்றும் கிறிஸ்தவ) த‌மிழ்ப் பெண்க‌ள் வீடுக‌ளில் அணிகிறார்க‌ள். க‌வுன் எனும் அபாயா அணிவ‌து, இன்று வ‌ரையில் ஈழ‌த் த‌மிழ்ப் பெண்க‌ளின் த‌னித்துவ‌மான‌ க‌லாச்சார‌மாக பேண‌ப் ப‌டுகின்ற‌து. (த‌மிழ் நாட்டில் இந்த‌ வ‌ழ‌க்க‌ம் இல்லை.) 

 ஐரோப்பிய‌ரின் க‌வுன் (Gown), அரேபிய‌ரின் அபாயா (Abaya), இவ்விர‌ண்டு சொற்க‌ளும் அடிப்ப‌டையில் ஒரே மாதிரியான‌ உடையை குறிக்கும். அதாவ‌து, க‌ழுத்தில் இருந்து க‌ணுக்கால் வ‌ரை ம‌றைக்கும், காற்றோட்ட‌மான‌ நீண்ட‌ அங்கி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்...

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல் ...

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்...