முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

1870: சிங்கள- முஸ்லிம் கலவரத்திற்கு காரணமான ஐரோப்பிய முஸ்லிம்கள்


இலங்கையில் 19 ம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த முதலாவது சிங்கள- முஸ்லிம் கலவரம் பற்றிய வரலாற்றுத் தகவல் ஒன்றை Sarawanan Komathi Nadarasa தினக்குரல் பத்திரிகையில் கட்டுரையாக பதிவு செய்துள்ளார். அதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் உள்ளது.

 பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளரின் தலைநகரமான கொழும்பு நகரில், மருதானை பகுதியில் இந்தக் கலவரம் நடந்துள்ளது. அப்போது போலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்தவர் ஓர் ஆங்கிலேயர். அவர் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து நேர்மையாக நடந்து கொண்டுள்ளார்.

அந்த ஆங்கிலேய போலிஸ் பொறுப்பதிகாரி, அன்று தீவிரமாக கலவரத்தில் ஈடுபட்ட சில முஸ்லிம்களை கைது செய்துள்ளார். அதில் மூன்று பேர் "வெள்ளையின ஐரோப்பியர்கள்"! உண்மையில் அவர்கள் தான் கலவரம் தீவிரமடைய காரணமாக இருந்துள்ளனர்!! ஒருவர் ஜேர்மனிய யூதர். மற்றைய இரண்டு பெரும் இஸ்லாமியராக மதம் மாறியிருந்த ஆங்கிலேயர்கள்.

இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகின்றது. ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்கள், பிரித்தாளும் உத்தியை பயன்படுத்தியே தமது காலனிகளை நிர்வகித்துள்ளனர். அதன் விளைவுகளை நாங்கள் இப்போதும் அனுபவிக்கிறோம்.

இலங்கையில் பௌத்த- சிங்களப் பேரினவாதத்தின் தந்தையாக கருதப்படும் ஒல்கொட் பிரபு பௌத்த மதத்திற்கு மாறியிருந்த ஆங்கிலேயர். அவர் தான் பௌத்த மத அடிப்படைவாதக் கருத்துக்களுக்கும் வித்திட்டவர். இப்போதும் சிங்களப் பௌத்தர்கள் அவருக்கான மரியாதை கொடுக்கின்றனர்.

அதே மாதிரி, இஸ்லாமியராக மதம் மாறியிருந்த ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களை ஒரு தனித்துவமான இனமாக்குவதற்கான பங்களிப்பை செய்திருக்கலாம். இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தின் தோற்றமும் அவர்களிடம் இருந்து வந்திருக்கலாம்.

உதாரணத்திற்கு, அந்தக் காலகட்டத்தில் வட இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜமாஅத் ஏ இஸ்லாமி இயக்கம் ஓர் மிதவாத மத அடிப்படைவாத அமைப்பு தான். அதன் தோற்றத்திற்குப் பின்னாலும் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் இருந்துள்ளனர்.

இன்றைய பாகிஸ்தானில் வேரிட்டுள்ள ஜமாஅத் ஏ இஸ்லாமி, எகிப்தில் தோன்றிய முஸ்லிம் சகோதரத்துவம் போன்ற மத அடிப்படைவாத அமைப்புகள் எல்லாம் ஆங்கிலேய காலனிய விசுவாசிகளால் தான் உருவாக்கப் பட்டன. இவர்கள் காலனிய ஆட்சியை எதிர்த்து எதுவும் செய்யவில்லை. மாறாக ஒத்துழைத்தனர். இந்து மத அடிப்படைவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் அப்படித் தான்.

பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலம் முழுவதும், உளவாளிகளை உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அன்று பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு போட்டியாக இருந்த ரஷ்யா மற்றும் பிரெஞ்சு வல்லரசுகளின் விஸ்தரிப்பை முறியடிப்பதற்கு உளவாளிகள் பயன்பட்டனர்.

அதே நேரம், காலனிகளில் வாழ்ந்த இனங்களை பிரித்து மோத வைப்பதற்கும் உளவாளிகள் தேவைப்பட்டனர். இதற்கென சிறப்புப் பயிற்சி பெற்ற ஆங்கிலேய உளவாளிகள் உள்ளூர் மொழியை சரளமாக பேசக் கூடியவர்களாக இருந்தனர். அது மட்டுமல்ல, இந்துவாக, இஸ்லாமியராக, பௌத்தராக மதம் மாறி உள்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றிருந்தனர். இதற்கு உலகம் முழுவதும் நிறைய உதாரணங்களை காட்டலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்...

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல் ...

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்...