முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாகிஸ்தானில் சீன முதலீடுகளுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள்


பாகிஸ்தானில் குவாட‌ர் துறைமுக‌ ந‌க‌ர‌த்தில் உள்ள‌ Pearl Continental எனும் ஆடம்பர ஹொட்டேலில், இம்மாத‌ம் ந‌ட‌ந்த‌ (ப‌ய‌ங்க‌ர‌வாத‌) துப்பாக்கிச் சூட்டுத் தாக்குத‌லில் ஒரு க‌ட‌ற்ப‌டையின‌ர் உட்ப‌ட‌ 5 பேர் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். ப‌லுசிஸ்தான் விடுத‌லை இய‌க்க‌த்தின் (BLA) ம‌ஜீத் அணி தாக்குத‌லுக்கு உரிமை கோரியுள்ள‌து.

அதிக‌ள‌வு ஊட‌க‌ க‌வ‌னத்தை க‌வ‌ராத‌ இந்த‌த் தாக்குதல், நவீன துறைமுக‌ ந‌க‌ர‌மான‌ குவாட‌ரில் பெரும‌ள‌வு ப‌டையின‌ர் குவிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ பாதுகாப்பு வ‌லைய‌த்தினுள் ந‌ட‌ந்துள்ள‌து.

சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர், நகருக்கு வெளியே பேருந்து வ‌ண்டிகளில் சென்ற‌ பாதுகாப்புப் ப‌டையின‌ரும், சீன‌ தொழிலாள‌ர்க‌ளும் வ‌ழி ம‌றித்து சுட்டுக் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் க‌ராச்சி ந‌க‌ரில் உள்ள‌ சீன‌ துணைத் தூத‌ர‌க‌த்தில் ந‌ட‌ந்த‌ தீவிரவாதத் தாக்குதலில், சீன விசாவுக்கு விண்ணப்பித்த இரண்டு பொது மக்களும், பாதுகாவலருமாக நான்கு பேர் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ஏன் இந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் பொதுவாக‌ ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌ங்க‌ளில் அறிவிக்க‌ப் ப‌டுவ‌தில்லை? அத‌ற்குக் கார‌ண‌ம் இந்த‌த் தீவிர‌வாத‌த் தாக்குத‌ல்க‌ள் பாகிஸ்தானில் உள்ள‌ சீன‌ இல‌க்குக‌ளை குறி வைத்து ந‌ட‌த்த‌ப் ப‌டுகின்ற‌ன‌.

எதிரி நாட்டுக்கு எதிரான‌ தாக்குத‌ல்க‌ள் "ந‌ல்ல‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம்" என‌ப் ப‌டும். அத‌னால் அமெரிக்காவும், இந்தியாவும் க‌ண்டுகொள்ளாம‌ல் புற‌க்க‌ணிக்கின்ற‌ன‌. ஊட‌க‌ங்க‌ளும் ந‌ம‌க்கு இதைத் தெரிவிக்காம‌ல் மௌன‌ம் சாதிக்கின்ற‌ன‌.

குவாட‌ர் ந‌க‌ர‌ம் ப‌லுசிஸ்தானில் உள்ள‌து. அத‌னை இல‌ங்கையில் உள்ள‌ அம்பாந்தோட்டையுட‌ன் ஒப்பிட‌லாம். அங்கும் பில்லிய‌ன் க‌ண‌க்கான‌ சீன‌ முத‌லீட்டில் ஒரு ந‌வீன‌ துறைமுக‌மும், விமான‌ நிலைய‌மும் க‌ட்ட‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. ச‌ர்வ‌தேச‌ க‌ட‌ல் வ‌ழியாக‌ ந‌ட‌க்கும் எரிபொருள் போக்குவ‌ர‌த்தை க‌ருத்தில் கொண்டு தான் பாகிஸ்தானில் குவாட‌ரிலும், இல‌ங்கையில் அம்பாந்தோட்டையிலும் சீனா முத‌லிட்டுள்ள‌து.

குறிப்பாக‌ குவாட‌ர் துறைமுக‌ம் உள்ள‌ ப‌குதி, பாகிஸ்தானில் ப‌லுச்சி சிறுபான்மையின‌ ம‌க்க‌ளின் பிர‌தேச‌ம் ஆகும். பாகிஸ்தான் அர‌சு ப‌லுசிஸ்தான் மாகாண‌த்தில் எந்த‌ அபிவிருத்தியும் செய்யாம‌ல் பொருளாதார‌த்தில் பின்த‌ங்கிய‌ நிலையில் வைத்திருக்கிற‌து.

ஒரு கால‌த்தில் சிறிய‌ மீன்பிடி துறைமுக‌த்தை ம‌ட்டும் கொண்டிருந்த‌ குவாட‌ர், த‌ற்போது துபாய் போன்று ந‌வீன‌ ந‌க‌ர‌மாக‌ மாறிக் கொண்டிருக்கிற‌து. அத‌னால் ஆதாய‌ம‌டைவோர் இஸ்லாமாபாத்திலும், க‌ராச்சியிலும் வாழும் அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளும், இராணுவ‌ அதிகாரிக‌ளும் தான். ப‌லுச்சி ம‌க்க‌ளுக்கு எந்த‌ ந‌ன்மையும் கிடைப்ப‌தில்லை.

நீண்ட‌ கால‌மாக‌, த‌னி நாடு கோரி பாகிஸ்தான் அர‌சுக்கு எதிராக‌ ஆயுத‌ப் போராட்ட‌ம் ந‌ட‌த்தும் BLA, சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் சீன‌ ஆக்கிர‌மிப்பாள‌ர்க‌ளையும் வெளியேற்றுவ‌த‌ற்காக‌ போராடுவ‌தாக‌ அறிவித்துள்ள‌து. அத‌ற்காக‌வே ம‌ஜீத் அணி என்ற‌ த‌ற்கொலைப் ப‌டையும் உருவாக்க‌ப் ப‌ட்ட‌து.

ஒவ்வொரு வ‌ருட‌மும் ப‌லுச்சி தீவிர‌வாதிக‌ளின் தாக்குத‌ல்க‌ளும், உயிரிழ‌ப்புக‌ளும் அதிக‌ரித்து வ‌ருகின்ற‌ன‌. ஆனால், சீனாகுக்கு குவாட‌ரில் இருந்து வெளியேறும் நோக்க‌ம் கிடையாது. அந்த‌ள‌வுக்கு பெருந்தொகைப் ப‌ண‌த்தை முத‌லீடு செய்துள்ள‌ன‌ர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்...

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல் ...

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்...