முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலங்கையில் "இன/மத முரண்பாடு" எனும் வர்க்கப் பிரச்சினை


இல‌ங்கையில் தற்போது தீவிர‌ம‌டைந்துள்ள‌ ம‌த/இன‌ முரண்பாடுக‌ளுக்கு பின்னால் உள்ள‌தும் வ‌ர்க்க‌ப் பிர‌ச்சினை தான். அதை ஓர் உதார‌ண‌ம் மூல‌ம் விள‌க்க‌லாம்.

மதவாதம், இனவாதம் எல்லாம் வர்க்க முரண்பாடுகளை மறைப்பதற்கான முகமூடிகள் தான். தன் நாட்டு மக்கள் எல்லோரும் அந்த முகமூடிகளை வாங்கி அணிய வேண்டுமென்று ஆளும் வர்க்கம் விரும்புகிறது. இதற்கென தயாராக இருக்கும் இனவாத அறிவுஜீவிகள், ஊடகங்கள், சமூக வலைத்தலங்களில் நச்சுக் கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் படிப்பறிவு குறைந்த பாட்டாளிவர்க்க மக்களை இனவாதக் கருத்துக்களால் மூளைச் சலவை செய்கின்றனர்.

அண்மையில் வ‌ட மேல் மாகாண‌த்தில் ந‌ட‌ந்த‌ முஸ்லிம் விரோத‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ளில் வ‌ன்முறையில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள் சிங்க‌ள‌ அடித்த‌ட்டு ம‌க்க‌ள். அதாவ‌து, லும்ப‌ன்க‌ள் என‌ப்ப‌டும் உதிரிப் பாட்டாளி வ‌ர்க்க‌த்தின‌ர். முஸ்லிம்க‌ளின் வீடுக‌ள், க‌டைக‌ளை கொளுத்தி, அங்கிருந்த‌ பொருட்க‌ளை சூறையாடியுள்ள‌ன‌ர். ஒரு தொழிற்சாலையில் வேலை செய்த‌ தொழிலாள‌ர்க‌ளே சீருடையில் சென்று கொளுத்தி உள்ள‌ன‌ர்.

அவ‌ச‌ர‌ கால‌ச் ச‌ட்ட‌ம் அமுலில் இருந்தாலும், வ‌ன்முறையில் ஈடுப‌ட்ட‌ ப‌ல‌ரைக் கைது செய்த போலிஸ் அடுத்த‌ நாளே விடுத‌லை செய்த‌து. சில இடங்களில் அர‌சிய‌ல்வாதிக‌ள் நேரில் சென்று விடுவித்துள்ள‌ன‌ர். ப‌ல‌ குற்ற‌வாளிக‌ளை CCTV க‌மெரா மூல‌ம் அடையாள‌ம் காண‌க் கூடிய‌தாக‌ இருந்தும் பொலிஸ் அவ‌ர்க‌ளை கைது செய்ய‌வில்லை.

ச‌ற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம். ஓரிரு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் கூட‌ இதே வ‌ட‌ மேல் மாகாண‌த்தில், இதே அடித்த‌ட்டு ம‌க்க‌ள் சுற்றுச் சூழ‌ல் மாச‌டைத‌லை எதிர்த்துப் போராட்ட‌ம் ந‌ட‌த்தினார்க‌ள். கொழும்பிலும் இத‌ர‌ ப‌குதிக‌ளிலும் மாண‌வ‌ர்க‌ள் இல‌வச‌க் க‌ல்வி உரிமைக்காக‌ போராடினார்க‌ள்.

அப்போதெல்லாம் இதே பொலிஸ் ஒடுக்குமுறைக் க‌ருவியாக‌ செய‌ற்ப‌ட்ட‌து. சாத்வீக‌ப் போராட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ ம‌க்க‌ளை அடித்து உதைத்து ம‌ண்டை உடைத்த‌து. கைது செய்ய‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளை ஒரு வ‌ருட‌மாக கூட‌ சிறையில் அடைத்து வைத்திருந்த‌ன‌ர்.

சிங்க‌ள‌ அடித்த‌ட்டு ம‌க்க‌ளில் ஒரு பிரிவின‌ர் இன‌வெறியுட‌ன் கல‌வ‌ர‌த்தில் ஈடுப‌ட்ட நேர‌ம் எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்காம‌ல் ஊக்குவித்த‌ அதிகார‌ வ‌ர்க்க‌ம், அதே ம‌க்க‌ள் வ‌ர்க்க‌ உண‌ர்வுட‌ன் அமைதி வ‌ழியில் போராடிய‌ நேர‌ம் அட‌க்குமுறை பிர‌யோகித்த‌து.

இத‌ன் மூல‌ம் சிறில‌ங்கா அர‌சு ம‌க்க‌ளுக்கு சொல்ல‌ விரும்பும் செய்தி இது தான்: "ம‌க்க‌ளே! தாராள‌மாக‌ இன‌வாத‌ம் பேசுங்க‌ள். இல‌ங்கையில் இன‌வாத‌ நோக்கில் நட‌த்த‌ப் ப‌டும் வ‌ன்முறைக‌ளுக்கு த‌ண்ட‌னை கிடையாது. ஆனால், நீங்க‌ள் வ‌ர்க்க‌ உண‌ர்வுட‌ன் உரிமைக‌ளைக் கேட்டால் அட‌க்கி ஒடுக்க‌ப் ப‌டுவீர்க‌ள்."

ஆக‌வே, நீங்க‌ள் உரிமைக‌ள‌ற்ற முட்டாள்த‌ன‌மான‌ இன‌வாதிக‌ளாக‌ இருக்க‌ப் போகிறீர்க‌ளா? அல்ல‌து, உரிமைக‌ளுக்காக‌ போராடும் த‌ன்மான‌முள்ள‌ வ‌ர்க்க‌வாதிக‌ளாக‌ இருக்க‌ப் போகிறீர்க‌ளா? முடிவு உங்க‌ள் கைக‌ளில்...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்...

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல் ...

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்...