முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாஜி இந்தியாவின் அடுத்த அடக்குமுறை: தடுப்பு முகாம்கள்!


இதோ நாஜி இந்தியாவின் அடுத்த கட்ட அடக்குமுறை: தடுப்பு முகாம்கள்!

இது அசாமில் தங்கியுள்ள பங்களாதேஷ் குடியேறிகளுக்கு எதிரானது மட்டுமல்ல. இந்த தடுப்பு முகாம்கள் நாளைக்கு நாடு முழுவதும் கட்டப் படலாம். தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழ் அகதிகளும் அதற்குள் அடைக்கப் படலாம். அது மட்டுமல்ல, நாளைக்கு அரசு நினைத்தால், யாரை வேண்டுமானாலும் ஏதாவதொரு சாட்டுக் கூறி குடியுரிமையை பறித்து தடுப்பு முகாமுக்கு அனுப்பலாம்.

அசாம் மாநிலத்தில் பல தசாப்தகாலமாக தங்கியிருந்து இந்தியப் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்த தொழிலாளர்களைத் தான், பாஜக நாஜிகளின் கொடுங்கோல் அரசு ஈவிரக்கமின்றி தடுப்பு முகாமிற்கு அனுப்புகிறது. ஏழை பாமரத் தொழிலாளர்கள், பிறப்புச் சான்றிதழ் போன்ற அரச ஆவணங்கள் வைத்திருக்காத காரணத்தை காட்டி, தடுப்பு முகாமுக்குள் அடைத்து வைக்கவிருக்கிறது.

இவ்வாறு தான் நாஜி ஜெர்மனியின் அடக்குமுறை ஆட்சி ஆரம்பமாகியது. பிரெஞ்சு, இத்தாலி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஜெர்மனியில் குடியேறியவர்கள் ஜெர்மன் குடியுரிமை பெறும் வாய்ப்பை இல்லாதொழித்தது. அப்படியான "சட்டவிரோத குடியேறிகளுக்காகவே" தடுப்பு முகாம்கள் கட்டப் படுவதாக ஒரு நியாயம் கூறியது. பிரஜாவுரிமை என்பது பிறப்பின் அடிப்படையிலானது என்று சட்டத்தை மாற்றியமைத்தது. அதைத் தான் பாஜக நாஜிகளின் அரசு இந்தியாவில் செய்கிறது.

நாஜி அரசினால் ஜெர்மன் யூதர்களின் குடியுரிமை பறிக்கப் பட்ட போதிலும், அவர்களை எடுத்தவுடனே தடுப்பு முகாம்களுக்கு அனுப்பவில்லை. முதலில் "கெட்டோ" எனும் குறிப்பிட்ட பரப்பளவு கொண்ட பிரதேசத்திற்குள் மட்டும் வாழும் வகையில் அவர்களது நடமாட்டம் கட்டுப் படுத்தப் பட்டது. யூதர்களுக்கு முன்னரே கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் போன்ற "விரும்பத்தகாத பிரஜைகளின்" குடியுரிமை பறிக்கப் பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப் பட்டிருந்தனர்.

குடியுரிமை பறித்தலும், தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்தாலும் இறுதியில் இனப்படுகொலையில் சென்று முடிந்தது என்பது வரலாறு. உண்மையில், அன்றைய காலகட்டத்தில் "Endlösung" எனப்படும் இனப்படுகொலை குறித்த தீர்மானம் எடுப்பதற்கு நீண்ட காலம் எடுத்தது. அது வரையில் தடுப்பு முகாம்கள் தேசப் பாதுகாப்புக்கு அவசியமானவை என்று தான் ஜெர்மன் மக்கள் நம்ப வைக்கப் பட்டிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்...

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல் ...

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்...