முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இஸ்ரேலில் வந்தேறி அமெரிக்கப் பெண்ணின் கொலைவெறி


படம் பார், பாடம் படி!

வந்தேறி அமெரிக்கப் பெண்ணின் கொலைவெறிக்கு பலியான பூர்வீக பாலஸ்தீனப் பெண்.

இஸ்ரேல்- பாலஸ்தீனப் பிரச்சினையானது, இன்றைக்கும் தொடரும் ஒரு மேற்கத்திய காலனிய ஆக்கிரமிப்புப் போர். அதனால் தான், அங்கு நடக்கும் இனப்படுகொலை, போர்க் குற்றங்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் பூரண ஆதரவு வழங்குகிறது.

ஒரு மருத்துவ தொண்டராக, கான் யூனிஸ் (காஸா) போராட்டக் களத்தில் காயமுற்றவர்களுக்கு உதவிய, ரஸான் அல் நஜார் என்ற இருபத்தியொரு வயது பாலஸ்தீன இளம்பெண் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். தொலைநோக்கி பொருத்தப் பட்ட சினைப்பர் துப்பாக்கியால், பட்டப் பகலில் குறிபார்த்து நெஞ்சில் சுட்டுள்ளனர். இது இஸ்ரேலிய படையினரின் போர்குற்றம் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை.

இந்தப் போர்க்குற்றம் உலகம் முழுவதும் கண்டனங்களை எழுப்பி வரும் நேரத்தில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்களை அடக்கியொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில், காஸா போராட்டக் காரர்களை பாதுகாக்க வேண்டுமென்ற தீர்மானம் கொண்டு வரப் பட்ட நேரம், அமெரிக்கா மட்டுமே எதிர்த்து வாக்களித்தது. ஐ.நா. சபையில் அமெரிக்க பிரதிநிதியாக கையை உயர்த்தியவரும் நிக்கி ஹெய்லி என்ற ஒரு பெண் தான்.

இதற்கிடையே இன்னொரு முக்கியமான தகவலையும் குறிப்பிட வேண்டும். பாலஸ்தீன மருத்துவ தாதி ரஸான் அல் நஜாரை சுட்டுக் கொன்ற இஸ்ரேலிய இராணுவ வீராங்கனை ரெபேக்கா ஓர் அமெரிக்கர்! அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் பிறந்து வளர்ந்த, ஒரு அமெரிக்கப் பிரஜையான ரெபெக்கா, தனது பதினெட்டாவது வயதில் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து வந்து இராணுவத்தில் சேர்ந்து கொண்டவர்.

இஸ்ரேலிய சட்டத்தின் படி, ஒரு யூதர் உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், இஸ்ரேலில் குடியேறும் உரிமை பெற்றிருக்கிறார். அப்படியான வந்தேறிகளுக்கு உடனடியாகவே இஸ்ரேலிய குடியுரிமையும், கடவுச்சீட்டும் கிடைத்து விடும். அதே நேரம், இன்றைய இஸ்ரேலிய தேசத்திற்குள் அடங்கும் பாலஸ்தீனர்கள், அந்த மண்ணில் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்திருந்தாலும் குடியுரிமை கிடையாது.

பாலஸ்தீனர்கள் ஒரு பக்கம் தாம் வாழ்ந்த மண்ணை இழந்து கொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அவர்கள் இன்றைக்கும் நாடற்றவர்களாக இருப்பதால், ஒரு சாதாரண பிரஜைக்குரிய உரிமைகளும் மறுக்கப் படுகின்றன. அவர்கள் சட்ட பூர்வமாக இஸ்ரேலிய தேச எல்லைகளுக்குள் வாழ்ந்தாலும், இஸ்ரேலிய பிரஜைகளாக அங்கீகரிக்கப் படவில்லை. அதே நேரம், அவர்களுக்காக பாலஸ்தீனம் என்ற தேசத்தை பிரிக்கவும் இஸ்ரேலிய அரசு தயாராக இல்லை.

இது முன்பு தென்னாப்பிரிக்காவில் இருந்த அப்பார்ட்ஹைட் என்ற இனவாத நிர்வாக அமைப்பின் இஸ்ரேலிய வடிவம் ஆகும். தென்னாபிரிக்காவிலும் வந்தேறிகளான ஐரோப்பியர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப் பட்டிருந்தன. ஆனால், பூர்வ குடிகளான ஆப்பிரிக்கர்கள் எந்த உரிமையும் இல்லாமல் இருந்தனர்.

இஸ்ரேல் "யூதர்களின் தாயகம்" என்று வெளியில் பிரச்சாரம் செய்யப் பட்டாலும், அந்த யூதர்களில் பெரும்பான்மையானோர் ஐரோப்பிய குடியேறிகள் தான். யூத மதத்தை பின்பற்றினாலும், அவர்கள் வெள்ளையின ஐரோப்பியர்கள் என்பதால் தான், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஐ.நா.விலும் இஸ்ரேலை பாதுகாக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கொரியா- சாம்சுங் தேசம்

"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?  அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர்  ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார். இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.  தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.  ப‌ல்லாயிர‌க்...

உளவாளிகளின் பாலம் (Bridge of Spies) - சினிமா விமர்சனம்

பனிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வைத்து, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் "Bridge of Spies" திரைப்படத்தை எடுத்துள்ளார். முதலில் கதைச் சுருக்கம்: 1957 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், சோவியத் யூனியனுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Rudolf Abel என்ற ஆசாமி கைது செய்யப் படுகின்றார்.  நீதிபதி உட்பட, அமெரிக்க அரசு அதிகாரிகள், கண்துடைப்பு விசாரணை ஒன்றுக்குப் பின்னர், அந்த உளவாளிக்கு மரண தண்டனை வழங்க விரும்புகின்றனர். அணுவாயுத பீதியூட்டப் பட்ட அமெரிக்க பொது மக்களும், தேசத் துரோகியை தூக்கில் போடத் துடிக்கின்றனர். இதற்கிடையே வழக்கறிஞர் டோனோவன், குற்றஞ் சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக வழக்கில் ஆஜராகின்றார். ஆரம்பத்திலேயே தீர்ப்பு இதுதான் என்பதை முடிவு செய்து விட்ட நீதிபதியிடம், நைச்சியமாகப் பேசி, மரண தண்டனையை நீக்கி, சிறைத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது: "சோவியத் யூனியனிடம் நமது உளவாளிகள் மாட்டி இருக்கலாம். அவர்களை விடுதலை செய்வதற்கு ரூடால்ப் ஆபெலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள முடியும். எதிர்பார்த்த படியே, சோவியத் யூனியன் மேல் ...

சோஷலிச சமுதாயம் பொதுநலவாதிகளை உருவாக்குகிறது

நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், எல்லோரும் சுயநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும் தனது நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில், ஒருவர் எந்தளவு பெரிய தவறு செய்தாலும் ஒத்துக் கொள்ளக் கூடாது. அது சரியென்று நியாயப் படுத்தி வாதாட வேண்டும். தனது தவறை வெளிப்படையாக ஒத்துக் கொள்பவன், "வாழத் தெரியாத முட்டாள்" என்று பரிகசிக்கப் படுகின்றான். ஆனால், சோஷலிச சமுதாயம் இதற்கு நேரெதிரானது. எல்லோரும் பொதுநலவாதிகளாக இருக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே போதிக்கப் படுகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளில், பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில், ஒவ்வொரு வாரமும் "சுயவிமர்சன ஒன்றுகூடல்" நடைபெறும். சுயவிமர்சன ஒன்றுகூடலில் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். தான் விட்ட பிழைகளை முதலில் கூற வேண்டும். சிலநேரம் அது சக மாணவன், சக தொழிலாளிக்கு எதிரான பொறாமை பற்றியதாக கூட இருக்கலாம்.  இதிலே முக்கியமானது என்னவென்...